திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் யார்?

By செய்திப்பிரிவு

திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு நாகை, திருப்பூர் ஆகிய 2 மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த 2 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்வதற்காக கட்சியின் மாநில நிர்வாகக் குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு கட்சியின் மாநிலச் செயலளார் இரா. முத்தரசன் தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் நாராயணா, கட்சியின் மூத்த தலைவர்ஆர். நல்லகண்ணு ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டனர்.

2 மக்களவைத் தொகுதிகளிலும் போட்டியிட மாவட்ட குழுவால் பரிந்துரைக்கப்பட்ட கட்சியினர் குறித்து விவாதிக்கப்பட்டது. தற்போது நாகை மக்களவை உறுப்பினராக உள்ள எம்.செல்வராஜ், திருவாரூர் மாவட்ட செயலாளர் வை.செல்வராசு, தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா, கட்சியின் கோட்டூர் ஒன்றிய செயலாளர் செந்தில்நாதன் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோரின் பெயர்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன என்று கூறப்படுகிறது.

திருப்பூர் மக்களவை உறுப்பினராக தற்போது கே.சுப்பராயன் உள்ளார். இத்தொகுதியில் போட்டியிடுவதற்கு கே.சுப்பராயன், ஈரோடு மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் பாப்பா மோகன், மாவட்ட நிர்வாகிகள் ரவி, ஸ்டாலின் குணசேகரன், மாநில துணைச் செயலாளர் நா.பெரியசாமிஉள்ளிட்டோரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இன்று (மார்ச் 18) நடைபெறும் மாநிலக் குழுக் கூட்டத்தில் இறுதி முடிவு எடுத்து, வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என தெரிகிறது

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE