சென்னை: மக்களவை தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் விரைவில் தொடங்க உள்ள நிலையில், தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு இன்று ஆலோசனை நடத்துகிறார்.
மக்களவை தேர்தல் தேதியை நேற்று முன்தினம் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்த நிலையில் அப்போதில் இருந்தே தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இதையடுத்து, மாநில அதிகாரிகள் அனைவரும் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹுவின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளனர்.
ஏற்கெனவே, தலைமை தேர்தல் அதிகாரி அனைத்து துறை செயலர்களுக்கும் எழுதிய கடிதத்தில் எந்த ஒரு அரசாணையும் முந்தைய தேதியிட்டு பிறப்பிக்கக் கூடாது என்றும், அரசாணை தொடர்பான குறிப்பு புத்தகத்தில் கோடிட்டு, கையொப்பமிட்டு அனுப்ப வேண்டும் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தற்போது கட்சித் தலைவர்கள், தலைவர்கள் சிலைகள், பெயர்ப் பலகைகளை மூடுவது, சின்னங்களை மறைப்பது, சுவர் விளம்பரங்களை மறைப்பது, போஸ்டர்கள், பேனர்களை அகற்றுவது உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
» அரசுப் பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் உபரி பணியிடங்கள்: பணிநிரவல் செய்ய பள்ளிக் கல்வித் துறை அனுமதி
» தேர்தல் பணிகளால் மருத்துவ சேவை பாதிக்கப்படக் கூடாது: சுகாதார அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்
இந்நிலையில், தமிழகத்தில் வரும் மார்ச் 20-ம் தேதி வேட்பு மனுத்தாக்கல் தொடங்குகிறது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஆட்சியர்கள் புதியவர்கள் என்பதால், அவர்களுக்கு தேர்தல் நடைமுறைகள் தொடர்பான ஆலோசனைகளை வழங்குவதற்காக, இன்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
இதில் மாவட்ட தேர்தல் அதிகாரிகளான மாவட்ட ஆட்சியர்கள், சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரியான மாநகராட்சி ஆணையர் ஆகியோர் பங்கேற்கின்றனர். தலைமைச்செயலகத்தில் இன்று மாலை 3 மணிக்கு நடைபெறும் இக்கூட்டத்தில், நேரடியாக வர இயலாத மாவட்ட ஆட்சியர்கள் காணொலி வாயிலாக பங்கேற்கின்றனர்.
இதில், வேட்பு மனுத்தாக்கலின்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள், வேட்புமனு பரிசீலனை மற்றும் இறுதி பட்டியல் வெளியிடுதல், சின்னம் ஒதுக்குதல் போன்றவை குறித்து அறிவுறுத்தல்கள் வழங்கப்படுகிறது.
மேலும், வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான பயிற்சியளித்தல், புதிய வாக்காளர்கள் சேர்க்கும் பணி, வாக்குப்பதிவு இயந்திரங்களை தயார் நிலையில் வைத்தல் போன்றவை குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு, தேவைப்படும் அறிவுறுத்தல்கள் வழங்கப்படுகிறது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago