சென்னை: மக்களவை தேர்தல் முதல் கட்டமாக ஏப்19-ம் தேதி தமிழகம், புதுச்சேரிக்கு வாக்குப்பதிவு ஒரேகட்டமாக நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, நாளை மறுதினம் வேட்பு மனுத்தாக்கல் தொடங்குகிறது. மார்ச் 30-ம் தேதி மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் நிலையில், அன்றிலிருந்தே தீவிர பிரச்சாரம் தொடங்கும். அன்றில் இருந்து ஏப்.17-ம் தேதி மாலை வரை 18 நாட்கள் மட்டுமே பிரச்சாாரத்துக்கான அவகாசம் உள்ளது.
இந்நிலையில், தேர்தல் ஆணையம் தனது கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. வருமானவரித் துறை, வங்கித்துறை, சுங்கம் மற்றும் வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். ரயில்வே துறைக்கும் தேர்தல் ஆணையம் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
முதல் நாளான நேற்று முன்தினம் மட்டுமே தமிழகத்தில் கணக்கில் வராத ரூ.2 கோடி வரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பறக்கும்படையினர், நிலை கண்காணிப்பு குழுக்கள், சோதனைச்சாவடிகள் அமைத்து சோதனையை தீவிரப்படுத்தியுள்ளனர். இதற்கிடையில், நாளை மறுதினம் மார்ச் 20-ம் தேதி வேட்பு மனுத்தாக்கல் தொடங்கும் நிலையில், அன்றில் இருந்தே மனுத்தாக்கல் செய்த வேட்பாளர்களின் செலவு கணக்கு கண்காணிப்பு தொடங்கும்.
» அரசுப் பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் உபரி பணியிடங்கள்: பணிநிரவல் செய்ய பள்ளிக் கல்வித் துறை அனுமதி
» தேர்தல் பணிகளால் மருத்துவ சேவை பாதிக்கப்படக் கூடாது: சுகாதார அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்
இதுதவிர கட்சிகளின் செலவும் கண்காணிக்கப்படும். இதற்காக தேர்தல் ஆணையத்தால், வெளிமாநில பார்வையாளர்கள் நியமிக்கப்படுவர். அந்த வகையில் விரைவில் செலவின பார்வையாளர்கள் தமிழகம் வர உள்ளனர். இம்முறை கூடுதல் பார்வையாளர்கள் சில தொகுதிகளுக்கு நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தேர்தல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago