சென்னை: கடந்த 2006-11 காலகட்டத்தில் உயர்கல்வி மற்றும் கனிம வளங்கள், சுரங்கத்துறை அமைச்சராக பொன்முடிபதவி வகித்தபோது விழுப்புரத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக செம்மண் வெட்டி எடுத்ததன் மூலம் அரசுக்கு ரூ.28.36 கோடிஅளவுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி மற்றும் ராஜமகேந்திரன், வி.ஜெயச்சந்திரன் ஆகியோர் மீது2012-ல் விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிந்தனர்.
இந்த வழக்கு, விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் வழக்கின் குறிப்பிட்ட சிலஆவணங்களை குற்றம்சாட்டப் பட்ட நபரான ஜெயச்சந்திரனுக்கு வழங்க மறுத்து விழுப்புரம் நீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜெயச்சந்திரன் மனுதாக்கல் செய்திருந்தார். அதில், செம்மண் குவாரி வழக்கு தொடர்பாக விசாரணை அதிகாரி கடந்த 2011-12 காலகட்டத்தில் என்னிடம் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்துள்ள நிலையில், அந்த ஆவணங்களை தற்போதைய சாட்சி விசாரணைக்கு வழங்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போதுமனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறி ஞர் அபுடுகுமார் ராஜரத்தினம் ஆஜராகி, ‘‘விசாரணை அதிகாரி தரப்பில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு உரிய பதிலை மனுதாரர் அளித்துள்ளார். அந்த பதிலை போலீஸார் முறையாக பரிசீலனை செய்திருந்தால் இந்த வழக்கே பதிவு செய்து இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டு இருக்காது. தங்களது தரப்பு சாட்சிவிசாரணையின்போது அதுதொடர் பான குறுக்கு விசாரணை தேவைஎன்பதால், வழக்கின் ஆவணங்களை வழங்க மறுத்து சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவை ரத்துசெய்ய வேண்டும்’’ என வாதிட்டார்.
» ராகுல் காந்தியின் நடைபயணம் நிறைவு விழா பொதுக்கூட்டம்: முதல்வர் ஸ்டாலின் இன்று மும்பை பயணம்
» ‘நீங்கள் நலமா’ திட்டத்தின் கீழ் 5 பயனாளிகளிடம் முதல்வர் கருத்து கேட்பு
அதையடுத்து விழுப்புரம் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து, ஆவணங்களை வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago