சென்னை: சர்வதேச கருத்தரங்குகள், முக்கியவிளையாட்டு நிகழ்ச்சிகளின்போது சிறப்பு விருந்தினர்களுக்கு மறைவான இடத்தில் வைத்து மதுபானம் விநியோகிக்கும் வகையில் நிபந்தனைகளுடன் உரிமம் வழங்க திருத்த அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளதாக தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரி வித்துள்ளது.
சிறப்பு விருந்தினர்களுக்கு... சர்வதேச கருத்தரங்குகள், முக்கிய விளையாட்டு நிகழ்ச்சிகளின்போது சிறப்பு விருந்தினர்களுக்கு மதுபானம் விநியோகிக்கும் வகையில் சிறப்பு உரிமம் வழங்கு வது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை எதிர்த்து பாமக வழக்கறிஞரும், சமூக நீதிக்கான வழக்கறிஞர் பேரவைத் தலைவருமான கே.பாலு, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி டி. பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும்விசாரணைக்கு வந்தது.
நிபந்தனைகள் விதிப்பு: அப்போது அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ். ராமன் ஆஜராகி, தமிழகத்தில் நடைபெறும் சர்வதேச கருத்தரங்குகள், முக்கிய விளையாட்டு நிகழ்ச்சி களின்போது அதில் பங்கேற்கும் முக்கிய பிரமுகர்களுக்கு மதுபானம் விநியோகிக்கும் வகையில் சிறப்பு உரிமம் வழங்குவது தொடர்பாக கடந்த மார்ச் 14-ம் தேதி நிபந்தனைகளுடன் கூடிய திருத்தஅறிவிப்பாணை வெளியிடப் பட்டுள்ளது எனக்கூறி அதை தாக்கல் செய்தார்.
» ‘நீங்கள் நலமா’ திட்டத்தின் கீழ் 5 பயனாளிகளிடம் முதல்வர் கருத்து கேட்பு
» இரண்டு சான்றிதழ்கள் வழங்குவதற்கு பதிலாக சீர்மரபினர் வகுப்பினர்களுக்கு ஒரே சான்றிதழ்
மேலும் அவர், இந்த புதியஅறிவிப்பாணைப்படி பொதுமக் களின் பார்வையில் படாதபடி மறைவான தனி இடத்தில் வைத்து மதுபானங்களை பரிமாற அனுமதிக்கும் வகையில் நிபந்தனைகள் விதிக் கப்பட்டுள்ளன என்றார்.
மார்ச் 20-க்கு தள்ளிவைப்பு: அப்போது குறுக்கிட்ட மனுதாரர் தரப்பு மூத்த வழக்கறிஞர் என்.எல்.ராஜா, பொது இடங்களில் மதுபானம் அருந்துவது குற்றம் என்ற மதுவிலக்கு சட்டத்துக்கு விரோதமாக இந்த திருத்த அறி விப்பாணை உள்ளதால் அதை எதிர்த்து வழக்குத் தொடர அனு மதிக்க வேண்டும் என்றார்.
அதையடுத்து நீதிபதிகள், இந்த வழக்கு விசாரணையை வரும் மார்ச் 20-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
42 mins ago
தமிழகம்
56 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago