சென்னை: 7 கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெறுவதை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் விமர்சித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் சனிக்கிழமை அறிவிக்கப்பட்டன. மொத்தம் 7 கட்டங்களாக ஏப்ரல் 19-ல் தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை வாக்குப் பதிவு நடக்கின்றன. ஜூன் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடந்து தேர்தல் முடிவுகள் வெளியாகின்றன.
தமிழகம் உள்ளிட்ட 22 மாநிலங்களில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி முதல் கட்டத்தில் தேர்தல் நடைபெறும் நிலையில், உத்தர பிரதேசம், பீகார், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் 7 கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது.
இதனிடையே, 7 கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெறுவதை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் விமர்சித்துள்ளார்.
» புதுச்சேரியில் 967 வாக்குச்சாவடிகள் அமைக்க திட்டம்: தலைமை தேர்தல் அதிகாரி ஜவஹர் தகவல்
» “கல்வியை காவிமயம் ஆக்குவதே திராவிட மாடலா?” - பிஎம் ஸ்ரீ பள்ளி திட்டம் மீது சீமான் விமர்சனம்
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை அமல்படுத்தும் முன் 'ஒரே கட்டமாக தேர்தல்' நடத்தும் முறையை ஏன் அமல்படுத்தக்கூடாது? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
13 mins ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago