புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 82 குடிநீர் திட்டங்களை சீரமைக்க ரூ.149 கோடி நிதி: முதல்வர் ஸ்டாலின் ஒப்புதல்

By செய்திப்பிரிவு

சென்னை: புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 82 கூட்டுக் குடிநீர் திட்டங்களை மறுசீரமைப்பு செய்ய ரூ.148.54 கோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிர்வாக அனுமதிவழங்கியுள்ளார். இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்துறைச் செயலர்தா.கார்த்திகேயன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

குடிநீர் வடிகால் வாரியம் மூலம்544 கூட்டுக் குடிநீர் திட்டங்கள் பராமரிக்கப்பட்டு, 4.53 கோடி பேருக்குபாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், ஊரகப்பகுதிகளில் உள்ள 1.25 கோடி வீடுகளில், இதுவரை 1.02 கோடி வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு கள் வழங்கப்பட்டுள்ளன.

காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், கன்னியாகுமரி, கோவை,தேனி மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களின் ஊரகப் பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

கடந்த 2023 டிசம்பர் மாதம் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பெருவெள்ளம் காரணமாக தமிழகத்தின் வடக்கு மாவட்டங்களில் 12 கூட்டுக் குடிநீர் திட்டங்கள் மற்றும் வெள்ளம் காரணமாக தென் மாவட்டங்களில் 70 கூட்டுக் குடிநீர் திட்டங்கள் பாதிக்கப்பட்டன. இவை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டு, பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த திட்டங்கள் முழு திறனுடன் நீண்டகாலம் செயல்பட, இவற்றை நிரந்தரமாக மறுசீரமைப்பு செய்வதுஅவசியமாகும். எனவே, புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 82 கூட்டுக் குடிநீர் திட்டங்களை மறுசீரமைக்க ரூ.148.54 கோடிக்குநிர்வாக அனுமதி அளித்து முதல்வர்ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்