சென்னை: தமிழகம் முழுவதும் உயர் நீதிமன்றஉத்தரவை மீறி தகுதியில்லாத செவிலியர்களுக்கு முறைகேடாக பணி நியமனம் வழங்கிய அதிகாரிகள் மீது துறை ரீதியாகவும், குற்றவியல் ரீதியாகவும் நடவடிக்கை எடுக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, நமக்கு நாமேசெவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தின் தலைவரான விழுப்புரம் மாவட்டம் அகூரைச் சேர்ந்த எஸ்.செந்தில்நாதன் சார்பில் வழக்கறிஞர் பி.மனோகரன், தமிழக அரசின்சுகாதாரத்துறை செயலர், லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர், டிஜிபி, தமிழக மருத்துவம் மற்றும் ஊரகப்பணிகள் இயக்குநர் ஆகியோருக்கு எதிராக சென்னை உயர் நீதி மன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
கோவிட் தொற்றுகாலத்தில் கரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் 2020-ம் ஆண்டு 2,366 செவிலியர்கள் உரிய வழிமுறைகளைபின்பற்றி இனசுழற்சி அடிப்படை யில் நியமிக்கப்பட்டனர். அதன்பிறகு 818 செவிலியர்கள் எந்த வழிமுறைகளையும் பின்பற்றாமல் நியமிக்கப்பட்டனர். இந்நிலையில், தமிழகம் முழுவதும் பணியாற்றி வரும் ஒப்பந்த செவிலியர்களை பணிநீக்கம் செய்து தமிழக அரசு 2022 டிச.30-ல் அரசாணை பிறப்பித்தது. அதன்காரணமாக 818 செவிலியர்கள் முதலிலும், அதன்பிறகு 2,366 செவிலியர்கள் 2-ம் கட்டமாகவும் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
இதை எதிர்த்து பாதிக்கப்பட்டசெவிலியர்கள் உயர் நீதிமன்றத்தில்வழக்கு தொடர்ந்தனர். அந்தவழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கரோனா காலகட்டத்தில் அவசர தேவைக்காக பணியமர்த்தப்பட்ட ஒப்பந்த செவிலியர்களின் நியாயமான கோரிக்கையை தமிழகஅரசு பரிசீலிக்க உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. அந்த வழக்கை கடந்த பிப்.6-ம் தேதி விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள், கரோனா காலத்தில் முறைப்படி நியமிக்கப்பட்ட 977 ஒப்பந்த செவிலியர்களை முன்னுரிமை அடிப்படையில் நியமிப்பது தொடர்பாக தமிழக அரசு பரிசீலிக்க உத்தரவிட்டது.
அதன்படி தமிழக அரசு முதல்கட்டமாக 977 ஒப்பந்த செவிலியர்கள் இனசுழற்சி மற்றும் தகுதியின் அடிப்படையில் நியமிக்கப்படுவர் என்றும், எஞ்சியவர்கள் அதன்பிறகு உருவாகும் காலியிடங்களில் படிப்படியாக நியமிக்கப்படுவர் என்றும் உயர் நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்தது. அந்த வழக்கு தொடர்ந்து நிலுவையில் உள்ளது.
ஆனால், இந்த உத்தரவாதத்தை மீறி தற்போது தமிழக மருத்துவம் மற்றும் ஊரகப்பணிகள் இயக்குநர் உள்ளிட்ட அதிகாரிகள், தகுதியானசெவிலியர்களுக்கு பணி நியமனம் வழங்காமல், தகுதியில்லாத செவிலியர்களிடம் இருந்து அதிகஅளவில் பணம் பெற்றுக்கொண்டு அவசரம், அவசரமாக குறுக்கு வழியில் பணியில் அமர்த்தியுள்ளனர். இந்த முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதில் முக்கிய அரசியல் பிர முகர்கள் பலர் சம்பந்தப்பட்டுள் ளதால் எங்களது புகார் முடித்துவைக்கப்பட்டுள்ளதாக அதிகாரி கள் தெரிவித்தனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது துறை ரீதியாகவும், குற்றவியல் ரீதியாகவும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கோரி யுள்ளார். இந்த மனு விரைவி்ல் விசாரணைக்கு வரவுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
49 mins ago
தமிழகம்
53 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
7 hours ago