தாம்பரம்: வேங்கைவாசல் மற்றும் கோவிலம்பாக்கத்தில் ரூ.19.65 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டப் பணிகளை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
செங்கல்பட்டு மாவட்டம், புனித தோமையார் மலை ஒன்றியம் வேங்கைவாசல் ஊராட்சியில் 2023-24-ம் நிதியாண்டில் ரூ.14.13 கோடி மதிப்பில் பல்வேறு திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் விழா நேற்று நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியர் ச.அருண்ராஜ், தென் சென்னை எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன், சோளிங்கநல்லூர் எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ் பங்கேற்று, திட்டப் பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்தனர். மேலும், பணிகளை குறிப்பிட்ட நாட்களுக்குள் முடிக்க வேண்டும் என ஆட்சியர் அறிவுறுத்தினார்.
இதேபோல், கோவிலம்பாக்கம் ஊராட்சியில் 2023-24-ம் நிதியாண்டில் ரூ.5.42 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் விழா மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இதில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்று பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், கூடுதல் ஆட்சியர் அனாமிகா, புனித தோமையார் மலை ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சங்கீதா மற்றும் வார்டு உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
» தேர்தல் பத்திரம் விவகாரம் | மாநில கட்சிகளுக்கு எப்படி ஆயிரக்கணக்கான கோடி பணம்? - அண்ணாமலை கேள்வி
» ‘கலைஞர் நூற்றாண்டு பூங்கா’ பணிகள் தொடங்கப்பட்டன: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேரில் ஆய்வு
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago