சென்னை: பராமரிப்பு பணி காரணமாக, சென்னை கடற்கரை-தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு இடையே நாளை 44 மின்சார ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுகிறது. சென்னை, கோடம்பாக்கம்-தாம்பரம் இடையே காலை 11 மணிமுதல் பிற்பகல் 3.15 மணிவரை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால், சென்னை கடற்கரை-தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் 44 மின்சார ரயில்களின் சேவை நாளை (17-ம் தேதி) முற்றிலுமாக ரத்து செய்யப்படுகிறது.
இதன்படி, சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே காலை 10.30, 10.40, 10.50, 11.10, 11.20, 11.30, 11.40, நண்பகல் 12, 12,10, 12.20, 12.40, 12.50, 1, 1.15, 1.30, 2, 2.15, 2.30 மணி, சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே 11, 11.50, மதியம் 12.30, 12.50, 1.45, 2.15 மணி, சென்னை கடற்கரை-அரக்கோணம் இடையே மதியம் 1 மணிக்கு இயக்கப்படும் ரயில்களின் சேவை நாளை முற்றிலுமாக ரத்து செய்யப்படுகிறது.
இதேபோல், மறுமார்க்கத்தில் தாம்பரம்-சென்னை கடற்கரை இடையே காலை 10.05, 10.15, 10.25, 10.45, 10.55, 11.05, 11.25, 11.35, நண்பகல் 12.15, 12.45, மதியம் 1.30, 1.45, 2.15, மாலை 4.30 மணி, செங்கல்பட்டு-சென்னை கடற்கரை இடையே காலை 9.40, 10.55, 11.30, நண்பகல் 12, மதியம் 1 மணி, காஞ்சிபுரம்-சென்னை கடற்கரை இடையே காலை 9.30 மணி, திருமால்பூர்-சென்னை கடற்கரை இடையே காலை 11.05 மணிக்கு இயக்கப்படும் ரயில் சேவையும் நாளை முற்றிலுமாக ரத்து செய்யப்படுகிறது.
சிறப்பு ரயில் சேவை: எனினும் பயணிகளின் வசதிக்காக நாளை தாம்பரம்-செங்கல்பட்டு இடையே காலை 11.55, மதியம்12.45, மதியம் 1.25, 1.45, 1.55, 2.40, 2.55 மணிக்கும், செங்கல்பட்டு-தாம்பரம் இடையே காலை 9.30, 9.40, 10.55, 11.05, 11.30, நண்பகல் 12, மதியம் 1 மணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.
» தேர்தல் பத்திர விவரங்களை முழுமையாக வழங்காதது ஏன்? - பாரத ஸ்டேட் வங்கிக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்
» 17 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக குற்றச்சாட்டு: எடியூரப்பா மீது வழக்குப் பதிவு
மேலும், பயணிகளின் வசதிக்காக மெட்ரோ ரயில் மற்றும் மாநகர பேருந்து சேவைகளைக் கூடுதலாக இயக்குமாறு சம்பந்தப்பட்ட போக்குவரத்து நிர்வாகங்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக, தெற்கு ரயில்வே சென்னைக் கோட்டம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
48 mins ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago