‘மாநகராட்சி’யானது திருவண்ணாமலை நகராட்சி: இனிப்பு வழங்கி மகிழ்ச்சி

By செய்திப்பிரிவு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து திருவண்ணாமலையில் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

திருவண்ணாமலை நகராட்சி உருவாகி நூற்றாண்டை கடந்து செயல்படுகிறது. சுமார் 1.65 லட்சம் மக்கள் தொகை கொண்டது. திருவண்ணாமலை நகராட்சியை, மாநகராட்சியாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு கடந்தாண்டு அறிவித்தார்.

இதையடுத்து, மாநகராட்சியாக தரம் உயர்த்துவதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன. திருவண்ணாமலை நகராட்சியுடன் வேங்கிக்கால் உட்பட 16 ஊராட்சிகளை இணைக்க முடிவு செய்யப்பட்டன. இதற்காக, ஊராட்சி மன்றம் மூலம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, தமிழக அரசுக்கு மாவட்ட நிர்வாகம் மூலம் கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டது. இது ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, தரம் உயர்த்த அனுமதி வழங்கப்பட்டது.

இந்நிலையில். திருவண்ணாமலை நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிவித்தார். இதைத்தொடர்ந்து, திருவண்ணாமலையில் திமுக மருத்துவரணி மாநில துணைத் தலைவர் கம்பன், நகராட்சி மன்றத் தலைவர் நிர்மலா வேல்மாறன் மற்றும் துணைத் தலைவர் ராஜாங்கம் உள்ளிட்டோர் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் வரவேற்றனர்.

அப்போது அவர்கள், “திருவண்ணாமலை நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி அறிவிப்பு வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், உறுதுணையாக இருந்த பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக்கொள் கிறோம். இதன்மூலம் நகர மக்களின் நீண்ட கால கோரிக்கை நனவாகி உள்ளது” என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்