மதுரை: வருமான வரித்துறை, அமலாக்கத் துறைகளில் லஞ்சம் ஊடுருவி இருப்பை ஏற்க முடியாது என்று கூறி அங்கித் திவாரிக்கு ஜாமீன் வழங்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
திண்டுக்கல் அரசு மருத்துவர் சுரேஷ் பாபுவிடம், அவர் மீதான சொத்து குவிப்பு வழக்கில் மேல் நடவடிக்கை எடுக்காமல் இருக்க லஞ்சம் வாங்கியதாக மதுரை அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரியை திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் அங்கித் திவாரி ஜாமீன் கோரி திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். இரு நீதிமன்றத்திலும் அவரது ஜாமீன் மனு தள்ளுபடியானது.
இந்நிலையில், அங்கித் திவாரி 2-வது முறையாக உயர் நீதிமன்ற கிளையில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். அதில், கைதான நாளிலிருந்து நூறு நாட்களுக்கு மேல் சிறையில் உள்ளேன். வழக்கில் இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. இதனால் ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. கூடுதல் அரசு வழக்கறிஞர் திருவடிக்குமார் வாதிடுகையில், ''அங்கித் திவாரி வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத் துறை குற்றப்பத்திரிக்கை தயார் நிலையில் உள்ளது. எனவே, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவில்லை எனக்கூறி ஜாமீன் கோர முடியாது. அங்கித்திவாரிக்கு ஜாமீன் வழங்கக் கூடாது'' என்றார்.
» நடிகர் எஸ்.வி.சேகருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை நிறுத்திவைப்பு
» இலங்கை கடற்படையினரால் காரைக்கால், தமிழக மீனவர்கள் 15 பேர் கைது
பின்னர் நீதிபதி, ''அமலாக்கத் துறை அதிகாரி ஒருவர் லஞ்சம் பெற்ற வழக்கு தீவிரமானது. அதிகாரிகள் லஞ்சம் வாங்குவது அதிகரித்திருப்பது நாட்டின் வளர்ச்சிக்கு நல்லதல்ல. சட்டவிரோத செயல்களையும், லஞ்சத்தையும் தடுக்க வேண்டிய பொறுப்பில் உள்ள வருமான வரித்துறை, அமலாக்கத் துறைகளிலும் லஞ்சம் ஊடுருவி இருப்பதை ஏற்க முடியாது. மனுதாரர் வழக்கில் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை குற்றப்பத்திரிகை தயாராக உள்ளது. உச்ச நீதிமன்ற தடை காரணமாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. எனவே மனுதாரரின் கோரிக்கை ஏற்க முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது'' என உத்தரவிட்டார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 mins ago
தமிழகம்
4 mins ago
தமிழகம்
28 mins ago
தமிழகம்
42 mins ago
தமிழகம்
52 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
6 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago