பிரபல தனியார் கூரியர் நிறுவனம் உள்பட சென்னையில் 12 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

By செய்திப்பிரிவு

சென்னை: பிரபல தனியார் கூரியர் நிறுவனம் உள்பட சென்னையில் 12 இடங் களில் அமலாக்கத் துறை சோதனை நடைபெற்றது.

சட்டவிரோத பணப் பரிவர்த் தனை புகார் தொடர்பாக, சென்னையில் 12 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று காலை முதல் சோதனை மேற்கொண்டனர். ராமநாதபுரம் எம்.பி. நவாஸ்கனி மற்றும் குடும்பத்தினருக்குச் சொந்த மான பிரபல கூரியர் நிறுவனத்தின் பல்லாவரத்தில் இருக்கும் தலைமை அலுவலகத்தில் காலை 6 மணி முதல் சோதனை நடைபெற்றது.

கிளை அலுவலகங்களிலும்... அந் நிறுவனத்தில் இருந்துவெளி மாநிலம், மாவட்டங்களுக்கு கொண்டு செல்லும் பார்சல்களை யும், பார்சல்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களையும் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். வெளிமாநிலங்களுக்கு செல்லும் பார்சல்களின் விவரங்கள், வரவு - செலவு கணக்குகள் குறித்து அனைத்தையும் ஆய்வு செய்தனர். அமலாக்கத் துறை சோதனை நடைபெற்றதால், பணியாளர்கள் யாரையும் அதிகாரிகள் வெளியேவிடவில்லை. மேலும், கூரியர்நிறுவனத்தின் கிளை அலுவலகங் களிலும் சோதனை நடத்தப்பட்டது.

ஒப்பந்த நிறுவனம்: இதேபோல், சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தனியார் நிறுவனம் ஒன்று, தேசிய நெடுஞ்சாலைகளில் பெயின்ட் மற்றும் ஸ்டிக்கர் ஒட்டும் பணியை ஒப்பந்தம் எடுத்து மேற்கொண்டு வருகிறது.

தி.நகர் பசுல்லா சாலையில் செயல்பட்டு வரும் இந்நிறுவனத்திலும் நேற்றுகாலை 7 மணி முதல்அமலாக்கத் துறை அதிகாரிகள்சோதனையில் ஈடுபட்டனர். மேலும், தேனாம்பேட்டையில் உள்ள இந்நிறுவனத்தின் உரிமையாளர் நரேஷ் என்பவரது வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.

ஸ்டிக்கர் வாங்கியதில் முறைகேடு: தேசிய நெடுஞ்சாலைகளில் ஒட்டுவதற்கு வெளிநாடுகளில் இருந்து விலையுயர்ந்த ஸ்டிக்கர் களை இறக்குமதி செய்ததில் பல கோடி ரூபாய் சட்டவிரோத பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டதாகவும், அரசியல் கட்சிகளுக்கு சட்டவிரோதமாக பணம் வழங்கிய தாகவும் எழுந்த புகாரையடுத்து இந்த அமலாக்கத் துறை சோதனை நடந்ததாகக் கூறப்படுகிறது.

கட்சிகளுக்கு பணம்: இதேபோல், பிரபல அரசியல்கட்சிகளுக்கு சட்டவிரோதமாகப் பணம் வழங்கியதாக திருவான்மியூர், முகப்பேர், கொளத்தூர், கிழக்கு கடற்கரை சாலை, அம்பத்தூர் ஆகிய பகுதிகளில் உள்ள தொழிலதிபர்களின் வீடுகள், அலுவலகங்கள், மயிலாப்பூரில் உள்ள மென்பொருள் நிறுவனம் என சென்னையில் 12 இடங்களில் 50-க் கும் மேற்பட்ட அமலாக்கத் துறை அதிகாரிகள் துணை ராணுவப்படை வீரர்கள் பாதுகாப்புடன் நேற்று சோதனை நடத்தினர்.

இந்த சோதனை தொடர்ந்து நடைபெறும் என்றும், சோதனை முழுமையாக முடிவடைந்த பின்னரே முழு விவரங்கள் தெரிய வரும் எனவும் அமலாக்கத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

15 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்