கோவையில் மார்ச் 18-ல் மோடியின் ‘ரோடு ஷோ’

By செய்திப்பிரிவு

கோவை: கோவையில் வரும் 18-ம் தேதி பிரதமர் மோடி ‘ரோடு ஷோ’ நிகழ்வில் பங்கேற்று, பொதுமக்களிடம் வாக்கு சேகரிக்கிறார்.

கோவை மக்களவை தொகுதியில் பாஜக இருமுறை வெற்றிபெற்றுள்ளது. எனவே, கோவை தொகுதியில் பாஜக கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்துக்காக தமிழகம் வரும் பிரதமர் மோடி, வரும் 18-ம் தேதி கோவையில் நடைபெறும் `ரோடு ஷோ' நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

3.5 கி.மீ. தொலைவுக்கு.. இதுகுறித்து பாஜக கோவைமாநகர் மாவட்டத் ஜெ.ரமேஷ்குமார்கூறியதாவது: வரும் 18-ம் தேதிகோவை வரும் பிரதமர் மோடி, திறந்த காரில் நின்றவாறு மக்களைசந்திக்கிறார். கவுண்டம்பாளையத்தில் தொடங்கி மேட்டுப்பாளையம் சாலை, ஆர்.எஸ்.புரம் வழியாக தலைமை அஞ்சல் நிலைய சந்திப்புஅருகே `ரோடு ஷோ' முடிவடைகிறது. மொத்தம் 3.5 கிலோமீட்டர் தொலைவுக்கு, காரில் நின்றவாறு பொதுமக்களிடம் பிரதமர் மோடி வாக்கு சேகரிக்கிறார்.

அவருடன் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மத்தியஇணை அமைச்சர் எல்.முருகன்,பாஜக மகளிரணி தேசியத் தலைவர்வானதி சீனிவாசன் எம்எல்ஏ உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர். வழிநெடுகிலும், கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. சாலையின் இருபுறமும் பொதுமக்கள் திரண்டு,பிரதமரை வரவேற்க உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக, பிரதமரின் `ரோடு ஷோ' தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து உயரதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. மேலும், `ரோடு ஷோ' நடைபெறும் பாதைகளில் துணை ராணுவப் படையினர், பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE