புதுக்கோட்டை: ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டினத்தைச் சேர்ந்தவர் அமீர் சுல்தான். இவர், புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே வேங்காங்குடியில் இறால் பண்ணையை குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்தார்.
கடற்கரையோரத்தில் உள்ள இந்த இறால் பண்ணையில் இருந்துபடகு மூலம் இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.111 கோடி மதிப்பிலான, 100 கிலோஹாஷிஷ் மற்றும் 876 கிலோ கஞ்சாஆகிய போதைப் பொருட்களை மார்ச் 10-ம் தேதி பறிமுதல் செய்ததிருச்சி சுங்கத் துறை நுண்ணறிவுப்பிரிவினர், அவற்றை நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். மேலும், தலைமறைவாக உள்ள அமீர் சுல்தானைதேடி வருகின்றனர்.
இதற்கிடையே, இறால் பண்ணை அமைந்துள்ள இடம், உப்பளம் எனும் பெயரில் அரசுக்குசொந்தமானது என்பது தெரியவந்தது. இதையடுத்து, ஆவுடையார்கோவில் வட்டாட்சியர் மார்ட்டின் லூதர் கிங் தலைமையில், மீன்வளத் துறை உதவி இயக்குநர் பஞ்சராஜ் மற்றும் போலீஸார் நேற்று அங்கு சென்று, இறால் பண்ணை கிடங்கை இடித்து தரைமட்டமாக்கினர். மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
25 mins ago
தமிழகம்
44 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago