சென்னை: சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் இந்த ஆண்டு இறுதிக்குள் இரண்டு ஏசி மின்சார ரயில்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் விரைவுப் பாதையில் ஏசி மின்சார ரயில் இயக்க வேண்டும் என்று பயணிகள் நெடுங்காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இக்கோரிக்கை தொடர்பாக ரயில்வே நிர்வாகம் ஆலோசித்து வருகிறது.
இதுபோல, தமிழக அரசும் முயற்சி எடுக்கிறது. இதன் தொடர்ச்சியாக, சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையேஏசி பெட்டிகள் கொண்டமின்சார ரயில் இயக்குவதற்கான சாத்திய கூறுகள் குறித்துசென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் முதல் கட்ட ஆய்வு பணிகளை கடந்த 2022-ம் ஆண்டு இறுதியில் தொடங்கியது. தற்போது, இந்த ஆய்வு முடிவடையும் தருவாயில் உள்ளது.
இதைத் தொடர்ந்து, தலா 12 பெட்டிகள் கொண்ட இரண்டு மின்சார ரயில்களை தெற்கு ரயில்வேக்கு ரயில்வே வாரியம் ஒதுக்கியது. இந்நிலையில், சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் இந்த ஆண்டு இறுதிக்குள் ஏசி மின்சார ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து,ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் சோதனை அடிப்படையில் ஏசி மின்சார ரயில் இயக்கப்படும். அதன்பிறகு, பயணிகளின் வரவேற்பை தொடர்ந்து படிப்படியாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஏசி மின்சார ரயில்களை பராமரிக்க தாம்பரம் அல்லது ஆவடியில் பிரத்யேகஉள்கட்டமைப்பு உருவாக்க முயற்சி எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago