விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து; ஒருவர் பலி

By இ.மணிகண்டன்

விருதுநகர் மாவட்டம் செங்குன்றாபுரத்தில் தனியார் பட்டாசு ஆலையில் இன்று திடீரென்று வெடி விபத்து ஏற்பட்டது. இதில் அடையாளம் தெரியாத பெண் ஒருவர் பலியானார்.

விருதுநகர் மாவட்டம் செங்குன்றாபுரத்தில் கணேசன் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் இன்று திடீரென்று வெடி விபத்து ஏற்பட்டது. இதில் அடையாளம் தெரியாத பெண் ஒருவர் பலியானார். போர்மேன் பிரபு (55) பலத்த காயம் அடைந்தார். வெடி விபத்தால் 15 அறைகள் தரைமட்டம் ஆகின. இதனால் ஆலையில் இருந்த தொழிலாளர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.

தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். வெடி விபத்திற்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை. எதனால் வெடி விபத்து ஏற்பட்டது என்பது குறித்து காவல்துறை சார்பில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

மேலும்