சென்னை: மெட்ரோ ரயில் பணி காரணமாக ஆயிரம் விளக்கு ஒயிட்ஸ் சாலை பகுதியில் நாளை முதல் ஒரு வருடத்துக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் மெட்ரோ ரயில் பணி காரணமாக ஆயிரம் விளக்கு, பகுதியில் ஒயிட்ஸ் சாலையில் செய்யப்பட உள்ள போக்குவரத்து மாற்றம் குறித்து போக்குவரத்து போலீஸார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை ஒயிட்ஸ் சாலையில் உள்ள ஆயிரம் விளக்கு பகுதிகளில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தினரால் மேற்கொள்ளப்படும் கட்டுமானப் பணிகளைக் கருத்தில் கொண்டு, போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறையினரால் 15.03.2024 முதல் 14.03.2025 வரை ஒரு வருட காலத்திற்கு போக்குவரத்து மாற்றங்களை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, பட்டுலாஸ் சாலை - ஒயிட்ஸ் சாலை சந்திப்பிலிருந்து ஒயிட்ஸ் சாலை - திரு.வி.க சந்திப்பு வரை வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது.
அண்ணாசாலை: ராயப்பேட்டை மணிக்கூண்டில் இருந்து அண்ணாசாலை நோக்கி ஒயிட்ஸ் சாலையில் வரும் வாகனங்கள் பட்டுலாஸ் சாலை - ஒயிட்ஸ் சாலை சந்திப்பில் திரும்பி தங்களது இலக்கை அடையலாம்.
» ‘லாபம் ஞானத்தையும், நஷ்டம் பாடத்தையும் புகட்டும்’ - சக்சஸ் பார்முலாவை பகிர்ந்த அதானி
» கொடுங்கையூரில் ஒருங்கிணைந்த ஈரம், உலர் கழிவுகளின் செயலாக்க நிலையங்கள்: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
அண்ணாசாலையிலிருந்து ஸ்மித் சாலையில் வரும் வாகனங்கள் ஸ்மித் ரோடு - ஒயிட்ஸ் சாலை சந்திப்பில் வலதுபுறம் திரும்ப தடை விதிக்கப்பட்டுள்ளது.
அண்ணாசாலையில் இருந்து வரும் வாகனங்கள் ஒயிட்ஸ் சாலை - திரு.வி.க சந்திப்பில் இருந்து பட்டுலாஸ் சாலை - ஒயிட்ஸ் சாலை சந்திப்பு வரை வழக்கம் போல் இயக்கப்பட்டு ராயப்பேட்டை மணிக்கூண்டிற்கு சென்றடையும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago