சென்னை: சென்னையில் ஆதரவற்ற முதியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங் கப்பட்டன. இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவன பயிற்சி மையத்தின் முன்னாள்முதல்வர் எம்.கே.கருப்பையாவின் மூத்த மகள் டாக்டர் கே.சூர்யா கடந்த 2014-ம் ஆண்டு மர்ம காய்ச்சலால் திடீரென உயிரிழந்தார்.
அவரது நினைவாக டாக்டர் கே.சூர்யா கல்வி மற்றும் மருத்துவ அறக்கட்டளையை அவரது குடும்பத்தினர் தொடங்கினர். அன்னாரின் நினைவு நாள் மற்றும் பிறந்த நாளன்று ஆதரவற்ற சிறார்கள் மற்றும் முதியோருக்கு ஆண்டுக்கு இருமுறை நலத்திட்ட உதவிகளை இந்த அமைப்பு சார்பில் வழங்கப் பட்டு வருகின்றன.
இதன்ஒருபகுதியாக மருத்துவர்சூர்யாவின் நினைவு நாளை முன்னிட்டு, சென்னை சூளையில் உள்ளமுதியோர் காப்பகத்தில் தங்கியிருக்கும் ஆதரவற்ற மூதாட்டிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதன்படி 30-க்கும் மேற்பட்டோருக்கு சோப்பு, எண்ணெய், டூத் பேஸ்ட், தைலம், பிஸ்கெட் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. பின்னர் அனைவருக்கும் உணவும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் எல்ஐசி பயிற்சிமைய முன்னாள் முதல்வர் எம்.கே.கருப்பையா, சமூக செயற்பாட்டாளர் ஜி.திலகர், டி.சந்தானம், அரும்பாக்கம் கே.வாசுகிநாதன், செயற்பாட்டாளர் டி.சுவிகர் ஜேக்கப், ஆர்.சுரேஷ்குமார் மற்றும் பூர்ணசந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago