தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே மகளிர் உரிமைத் தொகை கிடைக்கவில்லை எனக் கூறி பெண்கள் கண்களில் கறுப்புத் துணி கட்டி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சாத்தான்குளம் அருகே உள்ள முதலூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஆத்திக்காடு கிராமத்தில், 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் தமிழக அரசின் மகளிர் உரிமைத்தொகை பல பெண்களுக்கு கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து, பெண்கள் கடந்த மாதம் கிராம நிர்வாக அலுவலரிடம் சென்று முறையிட்டனர். அப்போது உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதைடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். ஆனால் மகளிர் உரிமைத் தொகை இதுவரை வரவில்லை. கடந்த வாரம் சாத்தான்குளம் வட்டாட்சியரிடம் மனு அளித்தனர்.
அதற்கு கோட்டாட்சியரிடம் சென்று முறையிடும் படி கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஆத்திக்காடு கிராமத்தைச் சேர்ந்த 50-க்கும்மேற்பட்ட பெண்கள் நேற்று கிராமத்தின் மைய பகுதியில் அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கண்களில் கறுப்புத் துணியை கட்டிக் கொண்டு போராட்டம் நடத்திய பெண்கள், தங்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்காத தமிழக அரசை கண்டித்து வரும் மக்களவை தேர்தலை புறக்கணிப்பு செய்வதாக அருகே பதாகை வைத்திருந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்ததும் சாத்தான்குளம் வட்டாட்சியர் இசக்கி முருகேஸ்வரி அங்கு சென்று பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது தகுதியான பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்க 15 நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்தார். இதையடுத்து பெண்கள் காலை 9 மணி முதல் நடத்திய போராட்டத்தை 11 மணியளவில் கைவிட்டு கலைந்து சென்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
37 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago