கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரிக்கு முதல்வர் அறிவித்த 31 புதிய திட்டங்கள் - ஒரு பட்டியல்

By செய்திப்பிரிவு

கோவை: கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு புதிய திட்டங்களை அறிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி ஆச்சிப்பட்டியில் நடைபெற்ற அரசு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு ரூ.1,237.51 கோடி மதிப்பீட்டில் கோயம்புத்தூர், ஈரோடு திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் முடிவுற்ற திட்டங்களை துவக்கி வைத்ததுடன் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும், 57,325 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், "கோவைக்கும், நீலகிரிக்கும், திருப்பூருக்கும், ஈரோட்டுக்கும் ஏராளமான திட்டங்களை கொண்டு வந்த ஆட்சிதான் திராவிட மாடல் ஆட்சி. அதுமட்டுமில்லாமல், இந்த 4 மாவட்டங்களில் 560 கோடியே 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 273 திட்டங்கள் இன்றைய விழாவில், மக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. 489 கோடியே 53 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 35 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டிருக்கிறது. 223 கோடியே 93 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 57 ஆயிரத்து 325 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டிருக்கிறது. இவற்றின் மொத்த மதிப்பு 1,273 கோடியே 51 லட்சம் ரூபாய்.

இதன் தொடர்ச்சியாக, சில புதிய அறிவிப்புகளையும் இந்த விழாவில் மகிழ்ச்சியோடு நான் வெளியிட விரும்புகிறேன்" என்று கூறி மாவட்ட வாரியாக புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். கோவை மாவட்டத்துக்கான 13 அறிவிப்புகள்:

ஈரோடு மாவட்டத்துக்கான 9 அறிவிப்புகள்: சோலார் பகுதியில் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில், காய்கறி மளிகை சந்தை வளாகம் அமைக்கப்படும்.

திருப்பூர் மாவட்டத்துக்கான 5 அறிவிப்புகள்: பெருமாநல்லூர் சாலையில், நல்லாற்றில், பொம்மநாயக்கன்பாளையம் மற்றும் போயம்பாளையம் சாலை வரை மற்றும் பிச்சம்பாளையம் மெயின் சாலை முதல் ராஜா நகர் வரை 11 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பாலங்கள் கட்டப்படும்.

நீலகிரி மாவட்டத்துக்கான 4 அறிவிப்புகள்: உதகமண்டலம் அரசு தாவரவியல் பூங்கா உலகத் தரத்துக்கு இணையாக மேம்படுத்தப்படும். இதற்காக பெரணி இல்லம் புதுப்பித்தல், புதிய சுகாதார வளாகம் அமைத்தல், ஆர்க்கிட் மற்றும் போன்சாய் வளர்ப்புக்கூடம், வடிகால் கால்வாய் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகள் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE