பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கண்ணாடிகள் வழங்குவதில் தாமதம்

அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பார்வை குறை பாடுள்ள மாணவர்களுக்கு இலவச கண் கண்ணாடிகள் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்களின் கல்வித் திறன் பாதிக் கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழக அரசின் பள்ளி சுகாதாரத் திட்டத்தின் கீழ் பள்ளி சிறார் கண்ணொளி காப்போம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் கீழ் ஒவ்வொரு ஆண்டும் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு கண் பரிசோதனை செய்து குறைபாடுள் ளவர்களுக்கு இலவசமாக கண் கண்ணாடி வழங்கப்பட்டு வருகிறது.

கண் பரிசோதனை

இத்திட்டத்தின்படி 2013 2014-ம் கல்வி ஆண்டில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 6-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் அடுத்த கல்வியாண்டு தொடங்கியுள்ள நிலையில் பார்வை குறைபாடுள்ள மாணவர் களுக்கு இன்னும் கண் கண் ணாடிகள் வழங்கப்படவில்லை. இதனால் அவர்களின் கல்வித் திறன் பாதிக்கும் சூழ்நிலை ஏற் பட்டுள்ளது.

71 ஆயிரம் மாணவர்கள்

இதுதொடர்பாக தமிழக பொது சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறிய தாவது:

அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் நடத்தப்பட்ட கண் பரிசோதனையில் 71 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு பார்வை யில் பிரச்சினை இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து பார்வை குறைபாடுள்ள மாணவர் களுக்கு வழங்குவதற்கான, ஆர்டர் கொடுத்து கண் கண்ணாடிகள் வாங்கப்பட்டு வருகிறது. இது வரை குறைபாடுள்ள சுமார் 20 ஆயிரம் மாணவர்களுக்கு கண் கண்ணாடிகள் வழங்கப்பட் டுள்ளன. மீதமுள்ள மாணவர் களுக்கும் விரைவாக கண் கண் ணாடிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்