சென்னை: தமிழ்நாடு மின்னுற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தை மின்னுற்பத்தி மற்றும் பகிர்மானத்துக்கு தனித்தனி நிறுவனமாக பிரிக்க தமிழக அரசு உத்தரவிட்டு அதற்கான அறிவிப்பாணையை அரசிதழில் வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு மின்னுற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தை (டான்ஜெட்கோ) மின்னுற்பத்தி மற்றும் பகிர்மானத்துக்கு தனித் தனி நிறுவனமாக பிரிக்க தமிழக அரசு கடந்த ஜனவரி 24-ம் தேதி அனுமதி வழங்கியது. தற்போது அதற்கான அறிவிப்பாணையை அரசிதழில் வெளியிட்டுள்ளது.
இதன்படி, 4,320 மெகாவாட் திறன் கொண்ட மேட்டூர் மற்றும் வடசென்னை அனல்மின் நிலையம் மற்றும் புதிதாக கட்டப்படும் உடன்குடி அனல்மின் நிலையம் ஆகியவை தமிழ்நாடு மின்னுற்பத்திக் கழகத்துக்கு மாற்றப்படும்.
அதேபோல், 2,321 மெகாவாட் திறன் கொண்ட குந்தா மற்றும் கொள்ளிமலை நீர்மின் நிலையங்கள் மற்றும் அரசுக்கு சொந்தமான 41 மெகாவாட் திறன் கொண்ட காற்றாலை நிறுவனங்கள் தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகத்துக்கு மாற்றப்படும்.
மேலும், கடந்த நிதியாண்டு நிதி அறிக்கைப்படி சொத்துகள் மற்றும் கடன்கள் இந்த நிறுவனங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும். மேலும், ஊழியர்கள் இரு நிறுவனங்களுக்கு அயல்பணி மூலம் பணியமர்த்தப்படுவார்கள்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 min ago
தமிழகம்
16 mins ago
தமிழகம்
44 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
21 mins ago
தமிழகம்
36 mins ago
தமிழகம்
39 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago