“கொட்டும் முரசு சின்னம் தேமுதிகவுக்கு சொந்தம்” - விஜய பிரபாகரன் தகவல்

By செய்திப்பிரிவு

திண்டுக்கல்: கொட்டும் முரசு சின்னம் தேமுதிகவுக்கு மட்டுமே சொந்தம், என அக்கட்சி நிறுவனர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் தெரிவித்தார்.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு ஒன்றிய பகுதிகளில் தேமுதிக கட்சி கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்ற விஜயபிரபாகரன் பின்னர், வத்தலகுண்டு அருகே குன்னூத்துப் பட்டியில் நடந்த கட்சி நிர்வாகி இல்ல விழாவில் பங்கேற்றார்.

அப்போது அவர் பேசியதாவது: திமுக அதிமுகவை தொடர்ந்து, தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையம் அங்கீகாரம் பெற்ற 3-வது கட்சி தேமுதிக மட்டுமே. 10 ஆண்டுகள் தோல்விகளை சந்தித்து இருந்தாலும் கொட்டும் முரசு சின்னம் தேமுதிகவின் சொத்தாக உள்ளது.

அண்ணன் சீமான் கொட்டும் முரசு சின்னம் தேமுதிகவுக்கு இல்லை என்பது போல் தவறாக பிரச்சாரம் செய்து தேமுதிக தொண்டர்களை குழப்பத்தில் ஆழ்த்து கிறார். ஹீரோக்களை நம்பி வாக்களிப்பது, சாதியை பார்த்து வாக்களிப்பது கூடாது. தமிழ் மக்களின் நலன் காப்பவர்கள் மீது நம்பிக்கை கொண்டு வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

8 mins ago

தமிழகம்

38 mins ago

தமிழகம்

31 mins ago

தமிழகம்

50 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்