“பாஜகவின் இறுதி யாத்திரை தொடங்கிவிட்டது” - நாஞ்சில் சம்பத் கருத்து

By செய்திப்பிரிவு

ஓசூர்: ராகுல் காந்தி நடைபயணம் தொடங்கிய நாள் முதலே பாஜகவின் இறுதி யாத்திரை தொடங்கி விட்டது என ஓசூரில் போச்சாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்தார்.

ஓசூரில் திமுக சார்பில், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற நாஞ்சில் சம்பத், செய்தியாளர்களிடம் கூறியதாவது: பிரதமர் மோடியின் விருப்பப்படி தேர்தல் நடத்த வேண்டும் என்ற வற்புறுத்தல் காரணமாகவே, தனது சொந்த காரணங்களுக்காகப் பதவியை ராஜினாமா செய்வதாகத் தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் பதவி விலக வேண்டியது தேர்தல் ஆணையர் இல்லை.

பிரதமர் மோடி தான் பதவி விலக வேண்டும். அப்போது தான் ஜனநாயகம் உயிரோடும், உணர்ச்சியோடும் இருக்கும். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி நடை பயணத்தைத் தொடங்கிய நாள் முதலே பாஜகவின் இறுதி யாத்திரை தொடங்கி விட்டது. அவர் மேற்கொண்ட நடை பயணம் மூலம் ஆதிக்கவாதிகளுக்கு அவரது விஸ்வரூபத்தைக் காட்டியிருக்கிறார். இதனால் ஆதிக்கவாதிகள் அஸ்தமனத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

11 mins ago

தமிழகம்

26 mins ago

தமிழகம்

30 mins ago

தமிழகம்

50 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்