தமிழக பள்ளிக் கல்வித் துறையின் ஃபேஸ்புக் பக்கத்தில் அத்துமீறல்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழக பள்ளிக் கல்வித் துறையின் அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கம் முடக்கப்பட்டுள்ளது. அடையாளம் தெரியாத நபர்களால் இந்த அத்துமீறல் நடந்துள்ளது.

பள்ளிக் கல்வித் துறையின் அதிகாரபூர்வ பேஸ்புக் பக்கத்தை சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பின்பற்றி வருகின்றனர். இதில் பள்ளிக் கல்வித் துறையின் முக்கிய அறிவுப்புகளோடு, விழிப்புணர்வு பதிவுகள், ஆசிரியர்களின் பேச்சுகள், வழிகாட்டுதல்கள் பதிவிடப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில், நேற்று முதல் பள்ளிக் கல்வித் துறையின் பேஸ்புக் பக்கம் முடக்கப்பட்டுள்ளது. அதில் சினிமா காட்சிகள் தொடர்ச்சியாக பதிவிடப்பட்டு வருகிறது. குறிப்பாக, விஜய் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்த ‘மாஸ்டர்’ படத்தின் இந்தி பதிப்பு வீடியோவாக பள்ளிக் கல்வித் துறையின் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்டு வருகிறது.

இதையடுத்து ஃபேஸ்புக் பக்கத்தை முடக்கிய அடையாளம் தெரியாத நபர்கள் குறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தரப்பில் டிஜிபி அலுவலகத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE