சென்னை: தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 1, பிளஸ்2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 26-ம் தேதி தொடங்கவுள்ளது.
ஒட்டுமொத்தமாக பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 8-ம் தேதியுடன் முடிவு பெறவுள்ளன. இந்நிலையில் தேர்வுகள் முடிந்த பின்னர் மாணவர்களின் விடைத்தாள்களை திருத்துவதற்கான கால அட்டவணையை தேர்வு துறை தற்போது வெளியிட்டுள்ளது.
அதன் விவரம்: பிளஸ் 2 வகுப்புக்கு ஏப்ரல் 1 முதல் 13-ம் தேதி வரையும், பிளஸ் 1 வகுப்புக்கு ஏப்ரல் 6 முதல் 25-ம் தேதி வரையும் விடைத்தாள் திருத்தும் பணிகள் நடத்தப்பட உள்ளன. தொடர்ந்து பத்தாம் வகுப்புக்கு ஏப்ரல் 12 முதல் 22-ம் தேதி வரையும் திருத்துதல் நடைபெற உள்ளது.
இவை நிறைவு பெற்றதும் மதிப்பெண்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படும். அதன்பின்னர் பிளஸ் 2 மே 6-ம் தேதியும், பிளஸ் 1 மே 14-ம் தேதியும், 10-ம் வகுப்புக்கு மே 10-ம் தேதியும் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago