தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் ரூ.172 கோடியில் 1,520 குடியிருப்புகள்: முதல்வர் திறந்துவைத்தார்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் ரூ.172.72 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 1,520 குடியிருப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: அனைவருக்கும் வீட்டுவசதி என்ற திட்டத்தின் கீழ் சென்னையில் பெரியார் நகர் திட்டப்பகுதியில் பழுதடைந்த பழைய குடியிருப்புகள் இடிக்கப்பட்டு, மறுகட்டுமான திட்டத்தின் கீழ் தரை மற்றும் 5 தளங்களுடன் ரூ.62 கோடியே 88 லட்சத்தில் 480 புதிய குடியிருப்புகள். மதுரை மாவட்டம், மஞ்சள்மேடு திட்டப்பகுதியில் தரை மற்றும் 3 தளங்களுடன் ரூ.37 கோடியே 25 லட்சத்தில் 320 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.

மேலும், புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி திட்டப்பகுதியில் தரை மற்றும் 2 தளங்களுடன் ரூ.27 கோடியே 6 லட்சத்தில்264 அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் அறந்தாங்கி திட்டப்பகுதியில் தரை மற்றும் 3 தளங்களுடன் ரூ.13 கோடியே 8 லட்சத்தில் 120புதிய குடியிருப்புகள். தேனி மாவட்டம், மீனாட்சிபுரம் திட்டப்பகுதியில் தரை மற்றும் 2 தளங்களுடன் ரூ.24கோடியே 41 லட்சத்தில் 240 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள் ளன.

அதேபோல், தஞ்சாவூர் மாவட்டம், மகாராஜசமுத்திரம் திட்டப்பகுதியில் தரை மற்றும் 2 தளங்களுடன் ரூ.8 கோடியே 4 லட்சத்தில்96 அடுக்குமாடி குடியிருப்புகள் என மொத்தம் ரூ.172 கோடியே 72 லட்சம் செலவில் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள 1,520 குடியிருப்புகளை சென்னை தலைமைச் செயலகத்தில் காணொலி காட்சியில், முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இப்புதிய குடியிருப்புகள், ஒவ்வொன்றும் தலா 400 சதுரஅடி பரப்பளவுடன், ஒரு பல்நோக்குஅறை, படுக்கை அறை, சமையல் அறைமற்றும் கழிவறை ஆகிய வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளன. மேலும்,அனைத்து குடியிருப்பு வளாகங்களும், சாலை வசதி, குடிநீர் வசதி,கழிவு நீரேற்று வசதி, மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு வசதி களுடன் அமைக்கப்பட்டுள்ளன.

இதுவரை 27,260 குடியிருப்புகள்: இந்த அரசு பொறுப்பேற்றதி லிருந்து இதுவரை தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம்சார்பில் 88 திட்டப் பகுதிகளில் ரூ.3,046.32 கோடியில் கட்டப்பட்ட27,260 அடுக்குமாடி குடியிருப்புகள்வீடற்ற ஏழை, எளிய மக்களுக்காக வும், குடிசைப் பகுதிகளில் வாழும் மக்களுக்காகவும் திறந்து வைக்கப்பட்டுள்ளன.

வீட்டுவசதி வாரிய குடியிருப்புகள்: சென்னை மாவட்டம், ஜாபர்கான்பேட்டையில் ரூ.48 கோடியே 70 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள 120 மத்திய வருவாய்ப் பிரிவு அடுக்குமாடி குடியிருப்புகள். தமிழ்நாடு அரசு அலுவலர் வாடகைக் குடியிருப்பு திட்டத்தின் கீழ், மதுரை மாவட்டம், தல்லாகுளத்தில், ரூ.59 கோடியே 92 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள 224 அடுக்குமாடிக் குடியிருப்புகள் என மொத்தம் ரூ.108 கோடியே 62 லட்சத்தில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் சார்பில் கட்டப் பட்டுள்ள கட்டிடங்களையும் முதல் வர் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை செயலாளர் காகர்லா உஷா, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் தலைவர் பூச்சி எஸ்.முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE