விசிக துணை பொதுச்செயலாளர் வீடு உள்பட 11 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

By செய்திப்பிரிவு

சென்னை: விசிக துணை பொதுச் செயலாளர் வீடு உள்பட சென்னை, கோவையில்11 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது.

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே அமலாக்கத்துறை சோதனை தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக, அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், விஐபிக்களின் வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், சட்டவிரோத பணப் பரிவர்த்தனை புகார் தொடர்பாக சென்னை,கோவையில் 11 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நேற்று நடைபெற்றது.

கடந்த 2022-ம் ஆண்டு தமிழக அரசு சார்பில் வழங்கிய பொங்கல் சிறப்பு தொகுப்பு பொருட்கள் தரமற்று இருந்ததாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து, கரூரைச் சேர்ந்த அரசு ஒப்பந்ததாரர் செல்வ ராஜ் என்பவருக்கு சொந்தமான நிறுவனம் உள்பட 80-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் ஏற்கெனவே சோதனை மேற்கொண்டிருந்தனர். இதில் பல முக்கிய ஆவணங்களை கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியானது.

இந்த ஆவணங்களில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடந்திருப்பதற்கான முகாந்திரம் இருப்பதுதெரியவந்ததையடுத்து, சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள செல்வராஜ் வீட்டுக்கு காலை 6 மணி அளவில் 7 பேர் கொண்ட அமலாக்கத் துறைஅதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். மேலும், பாரிமுனையில் உள்ள அவரது அலுவலகத்திலும் சோதனை நடைபெற்றது.

அதேபோல், அவருக்கு நெருக்க மானவர்களின் வீடுகளிலும் அம லாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அந்தவகையில் வேப்பேரி ஈவிகே சம்பத்சாலை பிரின்ஸ் கார்டனில் உள்ளஅடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தொழிலதிபர் மகாவீர் இரானி வீடு, அலுவலகம் மற்றும் அவர் தொடர்புடைய இடங்களிலும் சோதனை நடைபெற்றது.

இதேபோல், ஆழ்வார்ப்பேட்டை கஸ்தூரிரங்கன் சாலையில் வசிக் கும் லாட்டரி அதிபர் மார்ட்டினின் மருமகன் ஆதவ் அர்ஜுன் வீடு, அவரது அலுவலகங்கள் மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் 8 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று காலையில் சோதனையை மேற்கொண்டனர்.

ஆதவ் அர்ஜுன், கடந்த ஜனவரி மாதம்தான் விசிக-வில் தன்னை இணைத்து கொண்டார். அப்போது அவருக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டது. இவரது வீட்டில் ஏற்கெனவே அமலாக்கத்துறை சோதனைநடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

கோவை ராமநாதபுரத்தில் உள்ள கிருஷ்ணசாமி நகரைச் சேர்ந்த அனீஸ் பிரசன்னா என்பவர்,கோவை, திருச்சி சாலையில், கார்விற்பனை ஷோரூம் வைத்துள் ளார். இவரது வீட்டுக்கு 3 வாகனங்களில் 10-க்கும் மேற்பட்ட அமலாக் கத்துறை அதிகாரிகள் நேற்று காலை 6.30 மணிக்கு வந்தனர். வீட்டில் ஒவ்வொரு அறையாகச் சென்று சோதனை நடத்தினர்.

லேப்டாப், செல்போன் உள்ளிட்டவற்றில் இருந்த தரவுகளை ஆய்வு செய்தனர். ஆவணங்கள், தரவுகள் தொடர்பாக அங்கிருந்த அனீஸ் பிரசன்னாவிடம் விசாரணை நடத்தினர். இந்த சோதனை நேற்று மாலை வரை தொடர்ந்து நடந்தது.

அந்தவகையில், சென்னை, கோவையில் 11 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற் றது. இதில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. சோதனை முடிவில்தான் முழு விவரங்களும் தெரிய வரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE