சென்னை: திமுக கூட்டணியில் இணைந்துள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மக்களவைத் தேர்தலில் ஒரு தொகுதி ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மாநிலங்களவை தேர்தலில் அக்கட்சிக்கு ஒரு சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கூட்டணி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட பின் செய்தியாளர்களைச் சந்தித்த கமல்ஹாசன், திமுக கூட்டணியில் இணைந்து ஏன் என்பது தொடர்பாக பேசிய அவர், "இந்த தேர்தலில் நான் போட்டியிடவில்லை. திமுக கூட்டணிக்கு எங்களின் எல்லா ஒத்துழைப்பும் கிடைக்கும். இது பதவிக்கான விஷயம் அல்ல. நாட்டுக்கான விஷயம் என்பதால் எங்கு கை குலுக்க வேண்டுமோ அங்கு கை குலுக்கியுள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.
திமுக கூட்டணியில் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி இணையவிருப்பதாக கடந்த சில நாட்களாகவே செய்திகள் வெளியாகிவந்தன. அதை உறுதிப்படுத்தும் வகையில் கமலும் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருவதாக வெளிப்படுத்தி இருந்தார்.
இந்தநிலையில், இன்று திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து திமுக கூட்டணியில் இணைந்துள்ளார் கமல். வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யலாம் எனக் கூறப்படுகிறது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago