சென்னை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுக மீது ஊழல், முறைகேடு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் திமுக ஃபைல்ஸ் பாகம் ஒன்றை வெளியிட்டார். அதில், திமுக எம்பி ஜெகத்ரட்சகன், அமைச்சர் துரைமுருகன், முதல்வரின் குடும்பத்தினர் உள்ளிட்ட சிலரின் சொத்துப் பட்டியல் இடம் பெற்றிருந்தது.
அதனைத் தொடர்ந்து ஜூலை மாதம் திமுக ஃபைல்ஸ் பாகம் இரண்டை வெளியிட்டார். அதில்,அரசுத் துறைகளில் ஒப்பந்த பணிகளில் நடந்திருந்த முறைகேடுகள் குறித்த குற்றச்சாட்டுகள் இடம் பெற்றிருந்தன. இதையடுத்து திமுக ஃபைல்ஸ் பாகம் மூன்று என பெயரிலான தொலைபேசி உரையாடல்களை அண்ணாமலை வெளியிட்டு வருகிறார்.
இதுவரை அவர் வெளியிட்ட உரையாடல்களில், திமுக எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா ஆகியோர் தனித்தனியே, முன்னாள் உளவுத்துறை அதிகாரி ஜாபர் சேட் உடன் பேசியதாக அண்ணாமலை தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து திமுக ஃபைல்ஸ் பாகம் மூன்றின் 5-வது ஆடியோ பதிவை அண்ணாமலை தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் நேற்றுவெளியிட்டார்.
அதில், திமுக எம்.பி ஆ.ராசா, முன்னாள் உளவுத்துறை அதிகாரி ஜாபர் சேட் இடையிலான மற்றொரு தொலைபேசி உரையாடல்கள் இடம் பெற்றுள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். உரையாடலில், ரெய்டு நடக்கப்போவது தொடர்பாக முன்கூட்டியே தகவல் தெரிவிப்பது குறித்து பேசப்படுகிறது. ஆனால், அது குறித்தமுழு விவரங்கள் இல்லை.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில்அண்ணாமலை, “2 ஜி வழக்கின் முக்கிய குற்றவாளி ஆ.ராசா, முன்னாள் உளவுத்துறை அதிகாரி ஜாபர்சேட் இடையேயான உரையாடல் களை வெளியிட்டுள்ளோம். சிபிஐசோதனை தொடர்பாக குற்றவாளிமுன்கூட்டியே தகவல் பெறுகிறார்.இதில் மோசமான விஷயம் என்னவென்றால், சிபிஐ அதிகாரிகள் வருவதற்குள், ஆதாரங்கள் அனைத்தும், வேறு இடத்துக்கு மாற்ற தயாராக வைக்கப்பட்டிருந்தது தான்’ என தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
29 mins ago
தமிழகம்
46 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago