விஜய்யின் த.வெ.க உறுப்பினர் சேர்க்கை அணியில் 5 நிர்வாகிகள் நியமனம் 

By செய்திப்பிரிவு

சென்னை: நடிகர் விஜய் தொடங்கியுள்ள ‘தமிழக வெற்றிக் கழகம்’ கட்சியின் உறுப்பினர் சேர்க்கை அணி உருவாக்கப்பட்டு, அதற்கான நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான அக்கட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழக வெற்றிக்‌ கழகத்தின்‌ அடிப்படைக்‌ கட்டமைப்புகளை வலுப்படுத்தி வருகின்றோம்‌. இரண்டு கோடி உறுப்பினர்கள்‌ என்ற இலக்கை நிர்ணயித்துள்ளோம்‌. இதன்‌ முதற்கட்டமாக, உறுப்பினர்‌ சேர்க்கை அணியை உருவாக்கியுள்ளோம்‌.

மகளிர்‌ தலைமையில்‌ முதன்முதலாக உருவாக்கப்பட்டுள்ள இந்த அணியினர்‌, கட்சித்‌ தோழர்களோடு இணைந்து, மக்களுக்கு உதவி செய்வார்கள்‌. தமிழக வெற்றிக்‌ கழகத்தின்‌ உறுப்பினர்‌ சேர்க்கை அணிக்குக்‌ கீழ்க்கண்டவாறு கன்று நீர்வாகிகள்‌ நியமிக்கப்படுகிறார்கள்‌.

> மாநிலச் செயலாளர் - சி.விஜயலட்சுமி
> மாநில இணைச் செயலாளர் - எஸ்.என்.யாஸ்மின்
> மாநில பொருளாளர் - சம்பத்குமார்
> மாநிலத் துணைச் செயலாளர் - விஜய் அன்பன் கல்லணை
> மாநிலத் துணைச் செயலாளர் - எம்.எல்.பிரபு

இந்தப்‌ புதிய அணி, கட்சியின் உள்கட்டமைப்பைச்‌ சார்ந்து விரைவில்‌ விரிவாக்கம்‌ செய்யப்படும்‌. புதிதாக நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர்‌ சேர்க்கை அணி நிர்வாகிகளுக்குக்‌ கட்சித்‌ தோழர்கள்‌ அனைவரும்‌ முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்கிறேன்‌” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்