முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணாவுக்கு எதிரான வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தது சிபிஐ சிறப்பு நீதிமன்றம்

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா மற்றும் மத்திய மாநில அரசு அதிகாரிகளுக்கு எதிரான வழக்கு விசாரணையை மார்ச் 21-ம் தேதிக்கு தள்ளிவைத்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து தடையை மீறி குட்கா பொருள்கள் விற்கபடுவதாக எழுந்த புகார் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இதில் மாதவராவ், சீனிவாசராவ் உள்ளிட்ட 6 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்து கைது செய்தது.

இந்நிலையில், சிபிஐ வழக்கை அடிப்படையாக கொண்டு அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்துள்ளது. முறைகேடு மூலமாக பெற்ற பணங்களை சட்டவிரோதமாக முதலீடுகள் செய்யப்பட்டுள்ளது. இதில் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது எனக் கூறி விக்னேஷ், மாதவ ராவ், சீனிவாசராவ் , உமா சங்கர் குப்தா, பி.வி.ரமணா உட்பட 27 நபர்கள் மற்றும் 4 நிறுவனங்களுக்கு எதிராக அமலாக்க்க துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

இந்த வழக்கு நீதிபதி மலர் வாலன்டினா முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சிபிஐ தரப்பில் தாக்கல் செய்யப்படவுள்ள கூடுதல் குற்றப்பத்திரிக்கைக்குப் பின்னர் தங்கள் தரப்பில் அந்த ஆவணங்களின் அடிப்படையில் விசாரணை நடத்தபட வேண்டியுள்ளதாக தெரிவித்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை நீதிபதி மார்ச் 21-ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 mins ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

19 hours ago

மேலும்