சேலம்: நாளுக்கு நாள் இண்டியா கூட்டணி வலுப்பெற்று வருகிறது. திமுக கூட்டணி பேச்சுவார்த்தை நிறைவு பெறும் கட்டத்தில் உள்ளது. கடந்த மக்களவை தேர்தலில் 39 தொகுதிகளில் கைப்பற்றிய நிலையில், தற்போது, 40 தொகுதிகளிலும் எங்கள் கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறினார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் சேலத்தில் செய்தியாளர்களிடம் கூறியது: நாட்டில் ஊழல் நிறைந்த கட்சியாக பாஜக உள்ளது. தேர்தல் பத்திரம் குறித்து உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை பிரதமர் மோடி வரவேற்கவில்லை. தேர்தல் பத்திரம் வாங்கியவர்கள் விவரம் வரும் 13ம் தேதிக்குள் எஸ்பிஐ வங்கி வெளியிட வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஆனால், எஸ்பிஐ வங்கி ஜூன் 30ம் தேதி வரை அவகாசம் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளது. மத்திய அரசு கட்டுப்படுத்துவதால் தேர்தல் பத்திரங்களை வெளியிடாமல் மறைக்கவே எஸ்பிஐ வங்கி முயற்சிக்கிறது. வரும் 13ம் தேதிக்குள் தேர்தல் பத்திரம் விவரங்கள் அனைத்தையும் எஸ்பிஐ வெளியிட வேண்டும்.
மத்திய அரசு மக்களுக்கு வரியை குறைக்காமல், கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு வரிகளை குறைத்து, வாரா கடன்களை தள்ளுபடி செய்கிறது. இதனால், கார்ப்பரேட் கம்பெனிகள் மட்டுமே வளர்கிறது. தமிழகத்தில் கட்சி கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, மற்றொரு கட்சியை அழிப்பேன் என சர்வாதிகார தோரணையில் பேசி, அரசியல் நாகரீகத்தை கடைபிடிக்க மறுந்து, ஹிட்லர் போல செயல்படுகிறார்.
» தொடங்கிய ‘நீங்கள் நலமா’ திட்டத்தில் முதல்வர் ஸ்டாலினிடம் பயனாளிகள் பேசியது என்ன?
» “நீங்கள் எப்படி நலமாக இருக்க முடியும்?” - விமர்சித்த இபிஎஸ்ஸுக்கு டி.ஆர்.பி.ராஜா பட்டியல்
இயற்கை சீற்றங்களால் சென்னை, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களுக்கு தமிழக அரசு கேட்ட நிவாரணம் தொகை ரூ. 37 ஆயிரம் கோடியில் மத்திய அரசு ஒரு பைசா கூட தரவில்லை. ஆனால், தமிழகத்தில் பேசிய பிரதமர் மோடி, பேரிடரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு எந்த உதவியும் வழங்கவில்லை என பொய் சொல்கிறார்.
நாளுக்கு நாள் இண்டியா கூட்டணி வலுப்பெற்று வருகிறது. திமுக கூட்டணி பேச்சுவார்த்தை நிறைவு பெறும் கட்டத்தில் உள்ளது. கடந்த மக்களவை தேர்தலில் 39 தொகுதிகளில் கைப்பற்றிய நிலையில், தற்போது, 40 தொகுதிகளிலும் எங்கள் கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும். அரசு ஊழியர்களின் போராட்டத்தால் தேர்தல் பாதிக்கப்படாது.
குஜராத் மாநிலத்தில் உள்ள துறைமுகங்கள் வாயிலாக தான் நாடு முழுவதும் போதைப்பொருட்கள் கடத்தப்படுகிறது. ஆனால், இது குறித்து மத்திய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. குஜராத்தில் கவனம் செலுத்தாமல் திமுக-வை பழி தீர்க்க மத்தியில் ஆளும் பாஜக முயற்சிக்கிறது. வரும் மக்களவைத் தேர்தல் ஜனநாயக முறைப்படி நடக்குமா என்ற ஐயப்பாடு பாஜக-வை தவிர அனைத்து கட்சிகளுக்கும் உள்ளது.
விலைவாசி உயர்வு, மின்சார கட்டண உயர்வு உள்ளிட்டவற்றால் திமுக கூட்டணியிருக்கு பாதிப்பு ஏற்படாது. பாஜக ஆட்சியில் அம்பானி, அதானி தவிர வேறு யாரும் வளரவில்லை. மக்களவை தேர்தலில் பாஜக-வின் பொய் முகத்தை கிழித்துக்காட்டும் விதமாக எங்களது தேர்தல் பிரச்சாரம் இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
44 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago