பொதுமக்கள் ஒன்றுகூடி திமுக அரசுக்கு முடிவுரை எழுதுவோம்: இபிஎஸ்

By செய்திப்பிரிவு

சென்னை: போதைப் பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த திமுக அரசு தவறிவிட்டதாக கண்டனம் தெரிவித்து அதிமுக நடத்திய ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுத்து பொதுச் செயலாளர் பழனிசாமி வெளியிட்ட காணொலி உரை:

முதல்வர் குடும்பத்துக்கு நெருக்கமாக இருக்கும் ஆளுங்கட்சி நிர்வாகி ஒருவர் போதைப் பொருள் மாஃபியா தலைவனாக இருக்கிறார். ஒரேநாளில் ரூ.180 கோடிக்கு போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது, நாம் வாழ்வது தமிழகமா, போதைப் பொருள் மொத்த விற்பனை கிடங்கா என்ற கேள்வியை ஏற்படுத்துகிறது.

போதைப் பொருள் புழக்கத்தையும், இதை தடுக்க நடவடிக்கை எடுக்காமல் சர்வதேச போதைப் பொருள் மாஃபியாவுக்கு கருவியாக இருந்த திமுக அரசையும் இனியும் விட்டுவைத்தால், தமிழகத்தை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது. தமிழகத்தில் கடைசி துளி போதைப் பொருள் ஒழியும் வரை எங்கள் போராட்டம் தொடரும். பொதுமக்கள் ஒன்றுகூடி திமுக அரசுக்கு முடிவுரை எழுதுவோம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

11 mins ago

தமிழகம்

34 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்