புள்ளியியல் பணியாளர்களுக்கு பதவி உயர்வு: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்ட அறிக்கை: புள்ளியல் துறை நிர்வாகம் மறுசீரமைப்பு செய்யப்பட்டதை அடுத்துதொழில்நுட்ப பணியாளர்களின் பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் அதிகரிக்கப்பட்டன. ஆனால் நிர்வாகபணியாளர்களுக்கு பணிமாற்றல் முறையில் வழங்கப்பட்டு வந்த பதவி உயர்வுகள், உயர்கல்வி தகுதியின் அடிப்படையில் விதித்திருத்தங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டன.

இதனால் அமைச்சுப் பணியாளர்களுக்கான பதவி உயர்வு 2013-ம்ஆண்டு முதல் ரத்து செய்யப்பட்டுவிட்டன. இதையடுத்து அமைச்சுப் பணியாளர்கள், பிற அரசு துறைகளில் உள்ளதுபோல தங்களுக்கும் தனி அமைப்பு உருவாக்கி தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

அதனடிப்படையில் 156 பணியிடங்களில் 104 பணியிடங்கள் தொழில்நுட்ப பதவிகளாக உள்ளதால் அதில் மாற்றம் செய்யாமல்,மீதமுள்ள 52 நிர்வாக பணியிடங்களை அமைச்சுப் பணியாளர்களுக்கு பதவி மாற்றம் முலம் வழங்குவதற்கு துறை சார்பில் அரசுக்குபரிந்துரைக்கப்பட்டது.

ஆனால் பதவி உயர்வு தொடர்பான நடவடிக்கைகள் இதுவரை எடுக்கப்படவில்லை. எனவே தமிழகஅரசு, அமைச்சுப் பணியாளர்களின் கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

41 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்