மக்களவைத் தேர்தல் நேர்மையாக நடைபெற தி.மலை ஆட்சியரை மாற்றக் கோரி அதிமுக மனு

By இரா.தினேஷ்குமார்

திருவண்ணாமலை: ‘இந்து தமிழ் திசை' செய்தி எதிரொலியாக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியனை இடமாற்றம் செய்ய வேண்டும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரத சாகுவிடம், அதிமுக நேற்று மனு அளித்துள்ளது.

மக்களவைத் தேர்தல் நடை பெற உள்ளதால், தமிழகத்தில் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட அதிகாரிகள் கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் இடமாற்றம் செய்யப்பட்டனர். இந்த பட்டி யலில் இரண்டரை ஆண்டுகளை கடந்து பணியாற்றி வந்த திரு வண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ், வேளாண்மைத் துறை இயக்குநராக, கடந்த ஜன.27-ம் தேதி மாற்றம் செய்யப் பட்டார்.

பின்னர், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக பணியாற்றிய தெ.பாஸ்கர பாண்டியன், திரு வண்ணாமலை மாவட்ட ஆட்சி யராக நியமிக்கப்பட்டார். இவர், ஜன.29-ம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார். இதற்கு, அதிமுக ஆட்சேபம் தெரிவித்தது.

இது குறித்து அதிமுகவினர் கூறும்போது, “திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் திரு வண்ணாமலை, கீழ்பென்னாத் தூர், கலசப்பாக்கம், செங்கம், ஜோலார்பேட்டை மற்றும் திருப்பத்தூர் ஆகிய 6 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இதில், ஜோலார்பேட்டை மற்றும் திருப்பத்தூர் சட்டப்பேரவை தொகுதிகள், திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ளன. இந்த மாவட்டத்தில் நீண்ட காலமாக பணியாற்றிய தெ.பாஸ்கர பாண்டியன், திருவண்ணமலை மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர்தான், திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலராக செயல்படுவார்.

எனவே, தேர்தல் நேர்மையாக நடைபெற வேண்டும் என்றால், ஆட்சியரை மாற்றம் செய்ய வேண்டும். இது தொடர்பாக தேர்தல் ஆணை யரிடம் முறையிடுவோம்” என தெரிவித்திருந்தனர். இது குறித்த விரிவான கட்டுரை, “இந்து தமிழ் திசை”யில் கடந்த ஜன.29-ம் தேதி வெளியிடப்பட்டது.

இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியனை மாற்றம் செய்ய வேண்டும் என சென்னை தலைமை செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரத சாகுவிடம் அதிமுக நேற்று மனு அளித்துள்ளது.

இதுகுறித்து அதிமுக வழக் கறிஞர் அணி இணை செயலாளரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான ஆர்.எம்.பாபு முருக வேல் அளித்துள்ள மனுவில், “தேர்தல் ஆணையம் உத்தரவுபடி தமிழகத்தில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்யப்படவில்லை. திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக பணியாற்றிய தெ.பாஸ்கர பாண்டியன், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் பணியாற்றிய திருப்பத்தூர் மாவட்டத்தில், திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட திருப்பத்தூர் மற்றும் ஜோலார்பேட்டை சட்டப்பேரவை தொகுதி கள் உள்ளன. இதன் மூலம் மக்களவைத் தேர்தலில் திமுக அரசு ஆதாயம் அடையும். ஜனநாயக அடிப்படையில் மக்களவைத் தேர்தல் நேர்மையாக நடைபெற, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரை இடமாற்றம் செய்ய வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE