தமிழக அரசு விருதுகள் அறிவிப்பு: சிறந்த நடிகர் ஆர்.மாதவன், நடிகை ஜோதிகா, 2015-ம் ஆண்டின் சிறந்த திரைப்படமாக `தனி ஒருவன்' தேர்வு

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழக அரசு சார்பில், 2015-ம் ஆண்டுக்கான திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறந்த படமாக தனி ஒருவன் படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த நடிகராக ஆர்.மாதவனும், சிறந்த நடிகையாக ஜோதிகாவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தமிழக அரசு சார்பில், 2015-ம் ஆண்டுக்கான திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறந்த திரைப்படங்கள், நடிகர் நடிகையர், தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சிறந்த படத்துக்கான முதல் பரிசு தனி ஒருவன் படத்துக்கும், இரண்டாம் பரிசு பசங்க -2 என்ற படத்துக்கும், மூன்றாம் பரிசு பிரபா என்ற படத்துக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த படத்துக்கான சிறப்பு பரிசு இறுதிச்சுற்று படத்துக்கும், பெண்களைப் பற்றி உயர்வாக சித்தரிக்கும் படத்துக்கான சிறப்பு பரிசு 36 வயதினிலே திரைப்படத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த நடிகராக இறுதிச்சுற்றுப்படத்தில் நடித்த ஆர்.மாதவனும், சிறந்த நடிகையாக ஜோதிகாவும் (36 வயதினிலே) தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் 27 பேருக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளன.

இந்த விருதுகள் வழங்கும் விழா சென்னை, ராஜா அண்ணாமலைபுரம், முத்தமிழ்ப் பேரவை, டி.என். ராஜரத்தினம் கலையரங்கில் வரும் 6-ம் தேதி மாலை நடைபெற உள்ளது. தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் விழாவுக்குத் தலைமையேற்று விருதாளர்களுக்குத் தங்கப் பதக்கம், சிறந்த திரைப்படங்களின் தயாரிப்பாளர்களுக்கு காசோலை, நினைவுப் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்குகிறார். இந்தத் தகவல் அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

57 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்