‘சமாதி அல்ல.. சன்னதி..’ - கருணாநிதி நினைவிடத்தை பார்வையிட்ட வடிவேலு நெகிழ்ச்சி

By செய்திப்பிரிவு

சென்னை: கடந்த பிப்.26-ம் தேதி மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடம் மற்றும் டிஜிட்டல் அருங்காட்சியகத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்நிலையில், சென்னை - மெரினாவில் (காமராஜர் சாலை) அமைந்துள்ள கருணாநிதி நினைவிடம் மற்றும் அருங்காட்சியகத்தை நடிகர் வடிவேலு பார்வையிட்டார். அதன்பிறகு அவர் தெரிவித்தது..

“இந்த நினைவிடத்தை பார்த்து நான் வியப்படைந்தேன். இது கலைஞர் அய்யாவின் சமாதி அல்ல. இது அவரது சன்னதி. இதை பார்க்க இரண்டு கண்கள் போதாது. அவரது வாழ்க்கை முறை தொடங்கி அரசியல் போராட்டம் வரையில் கடந்து வந்த அனைத்தையும் இங்கு அறிந்து கொள்ளலாம். மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. இதனை மக்கள் அனைவரும் அவசியம் பார்க்க வேண்டும்.

அவரது ஏஐ வடிவத்துடன் அமர்ந்து பேசும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ஒவ்வொரு திமுக தொண்டருக்கும் இதுதான் குலதெய்வ கோயில். இது மணிமண்டபம் அல்ல மணிமகுடம். உலகத் தமிழர்கள் அனைவரும் இதை பார்க்க வேண்டும்” என தெரிவித்தார்.

2021-ம் ஆண்டு திமுக ஆட்சி அமைந்தவுடன், சென்னை மெரினா கடற்கரையில் ரூ.39 கோடியில் கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்கப்படும் என்று சட்டசபையில் 110 விதியின் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி பொதுப்பணித் துறை சார்பில் கருணாநிதி நினைவிடம் மற்றும் டிஜிட்டல் அருங்காட்சியகம் பிரமாண்டமான முறையில் அமைக்கப்பட்டு உள்ளது. பேரறிஞர் அண்ணாவின் நினைவிடமும் புதுப்பிக்கப்பட்டது. இவற்றை கடந்த மாதம் 26-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE