காஞ்சி ஜெயேந்திரர் காலமானார்! சோகத்தில் மூழ்கியது காஞ்சி

By வி. ராம்ஜி

காஞ்சி சங்கராச்சார்யர் என்று எல்லோராலும் போற்றி வணங்கப்படும் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் உடல்நலக்குறைவால் இன்று 28.2.18 காலை காலமானார்.

காஞ்சி சங்கரமடத்தின் சுவாமிகளாக பல வருடங்களாக ஆன்மிகம் மற்றும் சமூகப் பணிகளை மேற்கொண்டு வந்தார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள். 1954ம் வருடத்தில் இளைய மடாதிபதியாகப் பொறுப்பேற்ற அவர், 94ம் வருடத்தில் மடாதிபதியாகப் பொறுப்புகளை ஏற்று செயலாற்றி வந்தார். காஞ்சி சங்கர மடத்தின் 69வது பீடாதிபதி இவர்.

இந்த நிலையில், கடந்த பல வருடங்களாகவே அவருக்கு சர்க்கரை நோய் இருந்துவந்தது. அதற்கென சிகிச்சைகளும் எடுத்துக் கொண்டிருந்தார். சமீபத்தில் கூட அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு, சென்னை மருத்துவமனையில் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில், ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு இன்று 28ம் தேதி அதிகாலை திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து உடனடியாக சங்கரமடத்துக்கு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி ஜெயேந்திரர் ஸித்தியடைந்தார் என அறிவிக்கப்பட்டது.

இதை அறிந்ததும் ஏராளமான பக்தர்கள் காஞ்சி நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர். காஞ்சிபுரம் மற்றும் சுற்றியுள்ள ஊர்களில் இருந்தெல்லாம் பக்தர்கள், சங்கரமடத்துக்கு வந்து அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

காஞ்சி மாநகரமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்