தேசிய மதிப்பீட்டு ஆய்வு நடத்திய கணக்கெடுப்பில் தமிழகத்தில் 10வகுப்பு படிக்கும் மாணவர்களின் கல்வித்தரம் தேசிய சராசரிக்கும் குறைவாக இருக்கிறது என்று தெரியவந்துள்ளது.
குறிப்பாக கணிதம், ஆங்கிலம், அறிவியல், சமூக அறிவியலில் தேசிய சராசரிக்கும் குறைவாக இருப்பது தெரியவந்துள்ளது.
இதனால், விரைவாக பாடத்திட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவர வேண்டிய அவசியத்தையும், கற்றுக்கொள்ளுதல் முறையில் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றமும் தேவை என்பதையும் இந்த ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது.
தேசிய மதிப்பீட்டு ஆய்வு மையம், மாநிலம் முழுவதும் 353 பள்ளிகளில் படிக்கும் 10 வகுப்பு மாணவர்களிடம் ஆய்வு நடத்தியது. அவர்கள் படிக்கும் தமிழ், ஆங்கிலம், அறிவியல், கணிதம், சமூக அறிவியல் ஆகிய பாடங்களையும் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது.
வழக்கமாக 3,5 8-ம் வகுப்பு மாணவர்களை மட்டுமே ஆய்வுக்கு எடுத்து தேசிய மதிப்பீட்டு ஆய்வு மையம் ஆய்வு செய்த நிலையில், முதல் முறையாக 10-ம்வகுப்பு மாணவர்களை ஆய்வு செய்துள்ளது.
இந்த ஆய்வின் முடிவில், 5 பாடங்களிலும் மாணவர்களின் சராசரி மதிப்பெண் என்பது 200 முதல் 240 வரை மட்டும் எடுக்கிறார்கள் என்பது தெரியவந்தது. இதனால், மாணவர்கள் கல்வி கற்கும் விதத்தில் முன்னேற்றம் தேவை என்பதை வலியுறுத்துகிறது.
அதிலும், குறிப்பாக சமூக அறிவியல் பாடத்தில் மாணவர்களின் நிலை மிகவும் மோசமாக இருப்பதால், அந்தப் பாடத்தில் அதிகமான கவனம் செலுத்துவது அவசியமாகிறது. ஏறக்குறைய 33 சதவீத மாணவர்கள் அந்த பாடத்தில் தோல்வி அடைகிறார்கள்.
இது குறித்து அக குரு அமைப்பின் நிறுவனர் பாலாஜி சம்பத்திடம் கேட்டபோது அவர் கூறுகையில், “ இந்த ஆய்வின் முடிவுகள், ஒட்டுமொத்த 10ம் வகுப்பு பாடத் திட்டத்தையே சீரமைக்க வேண்டும், பள்ளி கல்வி முறையை மாற்ற வேண்டும் என்பதை காட்டுகிறது.
இப்போது, தேர்வு முறையில் மிகப்பெரிய பிரச்சினை என்னவென்றால், பாடப்புத்தகங்களில் இருந்து கேள்விகள் கேட்பதுதான். இதுபோன்ற கேள்விகள் மாணவர்களை மதிப்பிடத்தான் முடியும். ஆனால், நமது மாணவர்களின் திறன் உள்ளவர்களாகவும், போட்டிகளை சமாளிக்கக் கூடியவர்களாகவும் இருக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
புள்ளியியல் மற்றும் தர்க்கவியல், ஆங்கிலம் மற்றும் தமிழில் கட்டுரை வாசிப்பு திறன், புவியியல் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றில் திறன் குறைந்து இருப்பதால், அதில் முன்னேற்றம் தேவை என்பதையும் ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.
பாவை கல்வி குழுமத்தின் இயக்குநர் சி.சதீஸ் கூறுகையில், “ நம்முடைய பள்ளிகளில் கணிதம், அறிவியலுக்கு மட்டும் அதிகமான முக்கியத்துவம் அளித்துவிட்டு, தமிழ், ஆங்கிலம், சமூக அறிவியிலில் கவனம் செலுத்துவது இல்லை. இதன் காரணமாகவே அந்த பாடங்களில் மாணவர்கள் அதிகமாகத் தோல்வி அடைகிறார்கள்.
பெரும்பாலான பள்ளிகள் மாணவர்களுக்கு 9-ம் வகுப்பு பாடத்தை நடத்தாமல், நேரடியாக 10-ம் வகுப்பு பாடங்களை கற்பித்து, அவர்களை தயார்படுத்துகிறார்கள். இதுவும் மாணவர்கள் தேர்வில் சராசரியாக செயல்பட ஒரு காரணமாக இருக்கலாம்” எனத் தெரிவித்தார்.
தமிழக பள்ளிக் கல்வித்துறை பல்வேறு விதமான சீர்திருத்தங்களை கொண்டு வருவதாக உறுதி அளித்துள்ளது. குறிப்பாக தேர்வுகளில் மதிப்பெண் வழங்குவதில் மாற்றம், கற்பித்தலில் புதிய முறை, மாணவர்களை போட்டித் தேர்வுக்கு தயார் படுத்துதல் ஆகியவற்றுக்கு ஏற்றார்போல் பாடத் திட்டங்களையும் மாற்ற திட்டமிட்டுள்ளது.
இது குறித்து தமிழக முதுநிலை ஆசிரியர்கள் அமைப்பின் தலைவரும், வேதியியல் ஆசிரியருமான கே.பி.ஓ.சுரேஷ் கூறுகையில், “ நீட் தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்தும் நோக்கில் மட்டும் இந்த பாடத்திட்ட மாற்றங்கள் இருக்கக் கூடாது. கிராமப் புறங்களில் இன்னும் ஏராளமான மாணவர்கள் பள்ளி நேரம் முடிந்தபின், தங்கள் பெற்றோர்களுடன் வேலை செய்து வருகிறார்கள். ஏறக்குறைய 6 மணிநேரம் மட்டுமே பள்ளியில் இருக்கிறார்கள்.
இப்படி சூழல் இருக்கும்போது, எப்படி மாணவர்களை நாம் ஊக்கப்படுத்த முடியும்” என்று தெரிவித்தார்.
நகர்புறங்கள் மற்றும் கிராமப்புறங்களில் பயிலும் மாணவர்களுக்கு இடையே எந்தவிதமான பெரிய அளவுக்கு வேறுபாடுகளையும் தேசிய மதிப்பீடு ஆய்வு மையம் காணவில்லை.
முக்கிய செய்திகள்
தமிழகம்
16 mins ago
தமிழகம்
31 mins ago
தமிழகம்
56 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
12 hours ago