சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினின் 71-வது பிறந்த நாளை முன்னிட்டு, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, துணைத்தலைவர் ஜெகதீப் தன்கர்,பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் கார்கே உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு: இறைவன் நல்ல ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சியையும், மேலும் பல ஆண்டுகள் தொடர்ந்து நாட்டுக்கு அர்ப்பணிப்புடன் சேவைசெய்யவும் அருளட்டும்.
பிரதமர் நரேந்திர மோடி: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நல்ல ஆரோக்கியத்துடன் நீடூழி வாழ வாழ்த்துகிறேன்.
கேரள முதல்வர் பினராயி விஜயன்: நமது அரசியலமைப்பில் பொதிந்துள்ள ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற விழுமியங்களைப் பாதுகாப்பதில் உங்களின் உறுதியான நிலைப்பாடு மிகவும் ஊக்கமளிக்கிறது. நீங்கள் எல்லையில்லா மகிழ்ச்சி, நல்ல ஆரோக்கியத்துடன் திகழவும், தொடர்ச்சியான வெற்றிகளைப் பெறவும் வாழ்த்துகிறேன்.
அர்விந்த் கெஜ்ரிவால்: நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ வாழ்த்துகிறேன்.
காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே: திமுக தலைவர், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இனிய பிறந்த நாள்வாழ்த்து.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்: தமிழக முதல்வர் சகோதரர் மு.க.ஸ்டாலினுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். இந்தியாவின் பன்மைத்தன்மை, கூட்டாட்சி தத்துவத்தை பாதுகாக்க நாம் போராடும் இந்த தருணத்தில் நீங்கள் சிறப்பாக இருக்க வாழ்த்துகிறேன்.
உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ்: வரும் ஆண்டுகள் மிகுந்த மகிழ்ச்சியும், நல்ல ஆரோக்கியமும், வெற்றிகள் நிறைந்ததாகவும் இருக்கட்டும்.
பிஹார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ்: கடவுள் உங்களுக்கு நல்ல ஆரோக்கியம், நீண்ட ஆயுள், மகிழ்ச்சி மற்றும் வெற்றியை அருள்வாராக.
மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் சரத்பவார்: வரும் ஆண்டுகள் அளவில்லா மகிழ்ச்சியும், நல்ல ஆரோக்கியம் மற்றும் வெற்றிகள் நிறைந்ததாக இருக்கட்டும்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை: நல்ல உடல்நலத்துடன், நீண்ட ஆயுளுடன் மக்கள் பணி தொடர இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன்: சமூக நீதி, மகளிர் மேம்பாடு, இளைஞர் நலம், தொழில்வளர்ச்சி என தமிழகத்தை வளர்ச்சிப்பாதையில் செலுத்தி வரும் நண்பர்,திமுக தலைவர் முதல்வர் ஸ்டாலின் நீடூழி வாழ வாழ்த்துகிறேன்.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: உடல் வலிமையும், உள்ள உறுதியும் குன்றாது,நெடுங்காலம் நலமோடு வாழ்ந்து அரசியல் பணிகளை தொடர வாழ்த்துகிறேன்.
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா: நல்ல உடல்நலத்துட னும், நீண்ட ஆயுளுடனும், அரசியல்பணி தொடர வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அவர்கள் தெரிவித் துள்ளனர்.
மேலும், குடியரசு துணைத்தலைவர் ஜெகதீப் தன்கர், மக்களவை தலைவர் ஓம் பிர்லா, மத்திய அமைச்சர் நிதின்கட்கரி நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பலர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்து செய்தி மற்றும் பூங்கொத்து அனுப் பினார்.
முதல்வர் ஸ்டாலின் நன்றி: இந்நிலையில், தனது பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்த தலைவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் தனது நன்றியை தெரிவித்துள்ளார். கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு நன்றி தெரிவித்து வெளியிட்டசெய்தியில், “தங்களது வாழ்த்துகளுக்கு நன்றி. ஒடுக்கப்பட்டோரை யும, பாட்டாளிகளையும் உயர்த்தும் சீரிய முயற்சியில் திராவிடம் மற்றும் பொதுவுடமை இயக்கத்தின் ஆழமான கொள்கைகளால் ஊக்கம் பெற்றுக் கரம் கோப்போம்.
நமது மாண்புக்குரிய அரச மைப்புச் சட்டத்தின் விழுமியங்களைப் பாதுகாத்து போற்றுவோம்.இப்பயணத்தில் உங்களது ஆதரவும் ஊக்கமும் அளவிட முடியா தது” என தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
44 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago