சென்னை: தமிழக அரசின் எல்காட் நிறுவனமேலாண் இயக்குநர் அனீஷ் சேகர் தனது பதவியை ராஜினாமாசெய்துள்ளார். சொந்த காரணங்களுக்காக இந்த முடிவை எடுத் துள்ளதாக அவர் தெரிவித் துள்ளார்.
தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையின்கீழ் எல்காட் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தின் மேலாண் இயக்குநராக அனீஷ் சேகர் பதவி வகித்து வந்தார். கடந்த 2011-ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியான அனீஷ் சேகர், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த மருத்துவர். இவரது மனைவியும் மருத்துவராக உள்ளார்.
இந்நிலையில், தனது பதவியை ராஜினாமா செய்வதாக மத்திய அரசுக்கு அனீஷ் சேகர் சமீபத்தில் கடிதம் அனுப்பினார். இதை ஏற்றுக்கொண்டமத்திய பணியாளர் நலத்துறை, அவரை பணியில் இருந்து விடுவிப்பது தொடர்பாக அறிவிக்கை செய்தது. இதை ஏற்ற தமிழக தலைமைச் செயலர், அனீஷ் சேகரின் ராஜினாமாவை ஏற்பதாக அறிவித் துள்ளார்.
அனீஷ்சேகர் ராஜினாமா செய்துள்ள நிலையில், அவர் மக்களவைத் தேர்தலில் கேரள மாநிலத்தில் பாஜக சார்பில் போட்டியிடப் போவதாக தகவல் வெளியானது. இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, ‘‘நான் என் தனிப்பட்ட காரணங்களுக்காக ராஜினாமா செய்துள்ளேன்’’ என்றார். மேலும், மருத்துவர் என்பதால் கேரளாவில் மருத்துவ பணி மேற்கொள்ளவே அவர் பணியை ராஜினாமா செய் துள்ளதாகவும் கூறப்படுகிறது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
26 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago