71-வது பிறந்தநாள்: தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு தலைவர்கள், பிரபலங்கள் வாழ்த்து

By செய்திப்பிரிவு

சென்னை: இன்று (மார்ச் 1) தனது 71வது பிறந்தநாளைக் கொண்டாடும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் குவிந்து வருகிறது. குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி முதல் பல்வேறு அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் என வாழ்த்து குவிந்து வருகிறது. அவர்களின் வாழ்த்து தொகுப்பாக இங்கே...

குடியரசு தலைவர் முர்மு: உங்களுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இறைவன் உங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும், மேலும் பல ஆண்டுகள் தொடர்ந்து நாட்டுக்கு அர்ப்பணிப்புடன் சேவை செய்ய அருளட்டும்.

பிரதமர் மோடி: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அவர் நீண்ட, ஆரோக்கியமான வாழ்வை வாழ வாழ்த்துகிறேன்

தெலங்கானா ஆளுநர் தமிழிசை: தமிழக முதல்வர் அண்ணன் மு.க.ஸ்டாலினுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே: தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். நீங்கள் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ வாழ்த்துகிறேன்.

கேரள முதல்வர் பினராயி விஜயன்: இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தோழர் மு.க.ஸ்டாலின். நமது அரசியலமைப்பில் பொதிந்துள்ள ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற விழுமியங்களைப் பாதுகாப்பதில் உங்கள் உறுதியான தீர்மானம் மிகவும் ஊக்கமளிக்கிறது. நீங்கள் முடிவில்லாத மகிழ்ச்சி, நல்ல ஆரோக்கியம் மற்றும் தொடர்ச்சியான வெற்றிகளைப் பெற விரும்புகிறேன்.

அகிலேஷ் யாதவ்: “தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். வரும் ஆண்டு மகிழ்ச்சி, நல்ல ஆரோக்கியம் மற்றும் வெற்றிகள் நிறைந்ததாக இருக்கட்டும்!.” என சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி: தமிழ்நாடு முதல்வரும், தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு அவரது 71-ஆம் பிறந்தநாளான இன்று எனது உளமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். நல்ல உடல் நலத்துடன் அவரது பொதுவாழ்வு தொடர வாழ்த்துகிறேன்.

பாமக நிறுவனர் ராமதாஸ்: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று 71-ஆம் பிறந்தநாளைக் கொண்டாடும் நிலையில், அவர் நல்ல உடல் நலத்துடன் நூறாண்டு வாழ வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். சமூகநீதி உள்ளிட்ட தமிழ்நாட்டு மக்களின் நியாயமான எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவும் வாழ்த்துகிறேன்.

காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை: எல்லோருக்கும் எல்லாம் என்ற சமூகநீதிப் பாதையில் செயல்பட்டு வரும் ஆட்சியில் தமிழ்ப்புதல்வன், நான் முதல்வன் , மக்களைத் தேடி மருத்துவம் , திருநங்கைகளுக்கு கட்டணமில்லா உயர்க்கல்வி நாடு போற்றும் காலை உணவுத்திட்டம் என சொன்னதைத் தாண்டி சொல்லாத பல சாதனைகளையும் தொடர்ந்துவரும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் .

மநீம தலைவர் கமல்: சமூகநீதி, மகளிர் மேம்பாடு, இளைஞர் நலம், தொழில் வளர்ச்சி என தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் செலுத்தி வரும் எனது அன்பிற்கினிய நண்பர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர், தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின் நீடூழி வாழ அவரது பிறந்தநாளில் வாழ்த்துகிறேன்.

விஜய்: மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

திருவாவடுதுறை ஆதீனம்: இன்று பிறந்த நாள் காணும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நலமும், வளமும் தழைத்து, தமிழகம் மென்மேலும் சிறக்கும் வண்ணம் நீடூழி வாழவேண்டும் என நமது ஆன்மார்த்தமூர்த்திகளாகிய ஸ்ரீஞானமா நடராஜப் பெருமான் திருவடிமலர்களை சிந்தித்து வாழ்த்துகிறோம்.

இவர்கள் தவிர நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசியில் முதல்வர் ஸ்டாலினை தொடர்புகொண்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

25 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

18 hours ago

மேலும்