திமுகவுடன் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கூட்டணி வைக்க திரை மறைவு பேச்சு வார்த்தைகளை தொடங்கியிருப்பதாக தகவல் வெளியானது. மக்களவைத் தேர்தலில் குறைந்தது இரண்டு தொகுதிகள் வேண்டும் என திமுகவிடம் கேட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. அதேநேரம் இதுவரை இருதரப்பிலும் கூட்டணி பேச்சுவார்த்தை நடப்பதாக உறுதிப்படுத்தவில்லை.
மேலும், காங்கிரஸுக்கு ஒதுக்கப்படும் தொகுதியில் மய்யம் கட்சியினரை போட்டியிட வைக்கலாம் என்ற கருத்துக்கு காங்கிரஸ் உடன்படவில்லை என கூறப்படுகிறது. இவ்வாறான சூழலில் இதுவரை எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை.
பிப்.29-க்குள் கூட்டணி பேச்சை முடித்துவிட்டு படப்பிடிப்புக்காக வெளிநாடுகளுக்குச் செல்ல கமல்ஹாசன் திட்டமிட்டிருந்த நிலையில், பேச்சுவார்த்தை தொடங்கப்படாததால் பயணம் ஒத்தி வைத்திருப்பதாக கூறப்படுகிறது. கூட்டணிக் கட்சிகளுடனான பேச்சுவார்த்தை முடிவுற்ற பிறகு மக்கள் நீதிமய்யத்துடன் பேச்சுவார்த்தை நடத்த திமுக ஆலோசித்து வருவதாகத் தெரிகிறது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago