முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து

By செய்திப்பிரிவு

சென்னை: இன்று (மார்ச் 1) தனது 71வது பிறந்தநாளைக் கொண்டாடும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரபூர்வ எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “மாண்புமிகு தமிழ்நாடு தலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக முதல்வர் ஸ்டாலினுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் 71- வது பிறந்த நாளையொட்டி இன்று பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று தனது பிறந்தநாளையொட்டி குடும்பத்தினருடன் கேக் வெட்டி கொண்டாடினார். பின்னர், அண்ணா, கருணாநிதி, பெரியார் நினைவிடங்களுக்குச் சென்று மரியாதை செலுத்தினார்.

அதன்பின் கோபாலபுரம் இல்லத்துக்குச் சென்று, கருணாநிதி உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்துகிறார். அதன்பின், தாயார் தயாளு அம்மாளிடம் வாழ்த்து பெறுகிறார். அதைத்தொடர்ந்து, சிஐடி காலனியில் உள்ள கருணாநிதி இல்லத்துக்கு செல்லும் முதல்வர், அங்கு கருணாநிதி படத்துக்கு மரியாதை செலுத்திவிட்டு, ராசாத்தி அம்மாளிடம் வாழ்த்து பெறுகிறார்.

பின்னர், சித்தரஞ்சன் சாலை இல்லத்தில் காலை உணவு முடித்துவிட்டு, அண்ணா அறிவாலயம் செல்கிறார். அங்கு, கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏ.க்கள், முக்கிய நிர்வாகிகள், தொண்டர்களிடம் வாழ்த்து பெறுகிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்