அதிமுக விருப்ப மனு - இன்று கடைசி

By செய்திப்பிரிவு

விரைவில் அறிவிக்கப்பட உள்ள மக்களவை தேர்தலில் வலுவான தனி கூட்டணி அமைத்து போட்டியிடுவதில் அதிமுக உறுதியாக உள்ளது. அதற்கான ஏற்பாடுகளை நிர்வாகிகள் தீவிரமாக செய்து வருகின்றனர். ஏற்கெனவே தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, பொதுமக்கள் மற்றும் தொழில்துறையினர், துறை சார்ந்தவர்களின் கருத்துகளை பெற்று தேர்தல் அறிக்கையை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை குழு, கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணியில் இருந்த பாஜக, தமாகா தவிர்த்து பிற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

அதிமுக சார்பில் தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனு அளிக்க, மனு விநியோகம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுலகத்தில் கடந்த பிப்.21-ம் தேதி தொடங்கியது. விருப்ப மனுக்களை பொதுத் தொகுதியில் போட்டியிட விரும்புவோர் ரூ.20 ஆயிரம், தனித் தொகுதியில் போட்டியிட விரும்புவோர் ரூ.15 ஆயிரம் கட்டணத் தொகையை செலுத்தி வாங்கினர்.

இதுவரை சுமார் 1400-க்கும் மேற்பட்ட மனுக்கள் பூர்த்தி செய்து வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. விருப்ப மனுக்களை பெறவும், பூர்த்தி செய்து தரவும் இன்றே கடைசி நாள். இதனால் இன்று அதிக எண்ணிக்கையில் விருப்ப மனுக்களை வழங்குவார்கள் என எதிர்பார்க்கப்
படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE