சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் 71- வதுபிறந்த நாளையொட்டி, பெரியார், அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மரியாதை செலுத்துவதுடன், அறிவாலயத்தில் கூட்டணி கட்சித் தலைவர்கள், தொண்டர்களிடம் வாழ்த்து பெறுகிறார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது 71- வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். இதையொட்டி, பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று தனது பிறந்தநாளையொட்டி காலை 7 மணிக்கு சித்தரஞ்சன் சாலையில் உள்ள வீட்டில் குடும்பத்தினருடன் கேக் வெட்டி கொண்டாடுகிறார். காலை 8 மணிக்கு அண்ணா, கருணாநிதி, பெரியார் நினைவிடங்களுக்குச் சென்று மரியாதை செலுத்துகிறார். அதன்பின் கோபாலபுரம் இல்லத்துக்குச் சென்று, கருணாநிதி உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்துகிறார். அதன்பின், தாயார் தயாளு அம்மாளிடம் வாழ்த்து பெறுகிறார்.
அதைத்தொடர்ந்து, சிஐடி காலனியில் உள்ள கருணாநிதி இல்லத்துக்கு செல்லும் முதல்வர், அங்கு கருணாநிதி படத்துக்கு மரியாதை செலுத்திவிட்டு, ராசாத்தி அம்மாளிடம் வாழ்த்து பெறுகிறார்.
பின்னர், சித்தரஞ்சன் சாலை இல்லத்தில் காலை உணவு முடித்துவிட்டு, 9 மணியளவில் அண்ணா அறிவாலயம் செல்கிறார். அங்கு, கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏ.க்கள், முக்கிய நிர்வாகிகள், தொண்டர்களிடம் வாழ்த்து பெறுகிறார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
28 mins ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago