சென்னை: பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களின் பதவிக் காலத்தை நீட்டித்து துறையின் செயலர் குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் பிறப்பித்த அரசாணையில் கூறியிருப்பதாவது:
தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் செயல்படும் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களின் பதவிக் காலம் 2024-ம் ஆண்டில் முறையே ஏப்ரல், மே, ஜூலை மாதங்களில் நிறைவடைய உள்ளது. இந்த பதவி காலத்தை ஆகஸ்ட் மாதம் வரை நீட்டித்து ஆணை பிறப்பிக்குமாறு, தமிழ்நாடு மாதிரிப் பள்ளிகள் உறுப்பினர் செயலர், அரசிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அதனை ஏற்று, கடந்த 2022-ம்ஆண்டு ஏப்.23-ம் தேதி கட்டமைக்கப்பட்ட பள்ளி மேலாண்மைக் குழுஉறுப்பினர்களுக்கு ஜூலை 20-ம்தேதி வரையிலும், அதே ஆண்டுஏப்.30-ம் தேதி கட்டமைக்கப்பட்டவர்களுக்கு ஜூலை 27-ம் தேதிவரையிலும், 2022-ம் ஆண்டு மேமாதம் கட்டமைக்கப்பட்ட பள்ளிமேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கு ஆக.10-ம் தேதி வரையிலும், அதே ஆண்டு ஜூலை மாதம்கட்டமைக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு ஆக.17-ம் தேதி வரையிலும் பதவி காலம் நீட்டித்து பள்ளிக்கல்வித் துறை உத்தரவிடுகிறது.
அதேபோல், 2024-26-ம்ஆண்டுகளுக்கான பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்புக்கான புதிய உறுப்பினர்களை வரும் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்துக்குள் நியமிக்க வேண்டும். இந்த மறுகட்டமைப்பு நடைமுறைகளை மேற்கொள்ள தமிழ்நாடு மாதிரி பள்ளிகள் உறுப்பினர் செயலர் நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
6 mins ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago