குஜராத்தில் ரூ.2,000 கோடி போதை பொருள் பறிமுதல்; தமிழகத்தை சேர்ந்த கும்பலுக்கு தொடர்பா? - டெல்லி அதிகாரிகள் விசாரணை

By செய்திப்பிரிவு

சென்னை: குஜராத் கடல் எல்லையில் ரூ.2 ஆயிரம் கோடி மதிப்புள்ள போதைப் பொருள் பிடிபட்ட விவகாரத்தில், தமிழக கும்பல்யாருக்கேனும் தொடர்பு இருக்குமோ? என்ற கோணத்தில் டெல்லி போதை பொருள்தடுப்புப் பிரிவு போலீஸார்விசாரணை மேற்கொண்டுள் ளனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:

ரகசிய தகவல்: பாகிஸ்தானிலிருந்து தரைவழி, கடல்வழி, வான்வழியாக இந்திய எல்லைக்குள் போதை பொருட்கள் கடத்தப்படும் சம்பவம் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. கடல்வழியாக இதுபோன்ற கடத் தல்களை தடுப்பதற்காக இந்திய கடற்படை கப்பல்கள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட் டுள்ளன.

இந்நிலையில், குஜராத் எல்லையில் போதை பொருட்கள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவல் அடிப்படையில் கடற்படை, போதை பொருள் தடுப்புப் பிரிவு, குஜராத் காவல்துறை ஆகியவை இணைந்து இரு தினங்களுக்கு முன்னர் தேடுதல் பணியில் ஈடுபட்டன. அப்போது சிறிய வகை கப்பல்,குஜராத் எல்லையில் செல்வதை கடற்படையினர் கண்டறிந்தனர். உடனடியாக அந்தக் கப்பலை சுற்றி வளைத்து சோதனை செய்தனர்.

5 பேரிடம் விசாரணை: அதில் சுமார் 3,300 கிலோ எடை கொண்ட போதைப் பொருட்கள் இருந்தன. உடனடியாக அவற்றைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்த கப்பலில் இருந்த 5 பேரிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்தது. இதையடுத்து அவர் களை அதிகாரிகள் கைது செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்களின் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.2,000கோடிக்கும் அதிகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. போதைப் பொருள் கடத்தி வரப்பட்ட பைகளில் பாகிஸ்தான் தயாரிப்பு என எழுதப்பட்டிருந்ததாகக் கூறப்படு கிறது.

இந்நிலையில், கடத்தி வரப்பட்ட போதைப் பொருட்கள் தமிழகத்தைச் சேர்ந்த முக்கியப் புள்ளி ஒருவருக்கு அனுப்பிவைக்க திட்டமிடப்பட்டிருந்த தாக தகவல் வெளியானது. இருப்பினும் இதுவரை உறுதியான தகவல்கள் கிடைக்க வில்லை.

தொடர்பு குறித்த சந்தேகம்: ஏற்கெனவே டெல்லியில் பிடிபட்ட போதை பொருள் கடத்தல் கும்பலுக்கு சென்னையைச் சேர்ந்த ஒரு முக்கிய புள்ளி தலைமை வகித்த நிலையில் தற்போது பிடிபட்ட கும்பலுக்கும், தமிழகத்தைச் சேர்ந்த யாருக்கேனும் தொடர்பு இருக்குமா? என்ற கோணத்தில் விசாரணை நடத்த டெல்லி போதை பொருள் தடுப்புப் பிரிவு போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

இதுதொடர்பாக விரிவான விசாரணை நடத்த அப்பிரிவு போலீஸார் விரைவில் தமிழகம் வர திட்டமிட்டுள்ளதாகக் கூறப் படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE